மக்களே ,...அதிபர் ட்ரம்ப் பண்ற அலப்பறைக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கு! "சதர்ன் ஸ்பியர்" (Southern Spear)-னு ஒரு பயங்கரமான பேரை வச்சுட்டு வெனிசுலா நாட்டை அப்படியே அமுக்கிட்டாரே மனுஷன். ஜனவரி 3-ஆம் தேதியே வெனிசுலா அதிபர் மதுரோவையும் அவர் மனைவியையும் அமெரிக்கா ஸ்பெஷல் ஃபோர்ஸ் உள்ள புகுந்து, கையை முறுக்கி அப்படியே நியூயார்க்கு தூக்கிட்டு வந்துட்டாங்க. "நீங்க என்னடா வேர்ல்டு டூர் போறது, நான் உங்கள கூட்டிட்டுப் போறேன்"னு ட்ரம்ப் காட்டுன அதிரடியில உலக நாடுகளே ஆஃப் ஆகி நிக்குது.
இந்த லாக்-அவுட்னால கியூபா நிலைமை தான் பாவம் ரொம்ப 'டேமேஜ்' ஆகிடுச்சு. வெனிசுலாவுல இருந்து வர்ற 70% ஆயிலை ட்ரம்ப் கட் பண்ணதுல, அங்கே 18 மணி நேரம் கரண்ட் இல்லாம எல்லாரும் இருட்டுல கைத்தட்டிட்டு இருக்காங்க. "ஒழுங்கா என்கிட்ட ஒரு டீல் போடுங்க, இல்லன்னா ஒரு சொட்டு எண்ணெய் கூட வராது"னு ட்ரம்ப் போட்ட மிரட்டலுக்குக் கியூபா இப்போ பயங்கர 'பாகுபலி' கிளைமாக்ஸ் மோடுல தவிச்சிட்டு இருக்கு. சாப்பாட்டுக்கே அங்க லாட்டரி அடிக்கிற நிலைமை வந்துடுச்சுன்னா பாத்துக்கோங்க!
மறுபக்கம், நம்ம "டிராகன்" சீனாவுக்குத் தான் செம நோஸ் கட். வெனிசுலா எண்ணெயில முக்கால்வாசியை சீனா தான் இவ்வளவு நாளா குடிச்சுட்டு இருந்துச்சு. இப்போ ட்ரம்ப் குறுக்கே வந்து கப்பலை எல்லாம் மறிச்சதுல, ஒரு நாளைக்கு 6 லட்சம் பேரல் வந்த இடத்துல இப்போ வெறும் ஒன்றரை லட்சம் தான் வருது. இதனால சீனாவோட சின்ன சின்ன ரிஃபைனரி (Refineries) எல்லாம் இப்போ புகையே வராம மூடிட்டு இருக்கு. "வெனிசுலா என்னோட ஏரியா.. இங்க அமெரிக்க கம்பெனி தான் இனிமே முதலீடு பண்ணும்"னு ட்ரம்ப் சொன்னது சீனாவுக்கு செம காண்டா இருக்கு.
இதையெல்லாம் பார்த்த மத்த நாடுகள், "என்னப்பா இது.. ஊர் சொத்தை ஒருத்தன் கொள்ளை அடிக்கிறான், இது இன்டர்நேஷனல் திருட்டுத்தனம்"னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, வெள்ளை மாளிகையில இருக்குறவங்க ரொம்ப 'பஞ்ச்' பேசுறாங்க. "நாங்க ஏதோ போதைப் பொருள் கடத்தலைத் தான் தடுத்தோம், அந்த ஊர் சொத்தை அந்த மக்களுக்கே வாங்கி தரப்போறோம்"னு ஒரு ரீல் சுத்துறாங்க. இதையெல்லாம் நம்ம ராகுல் காந்தில இருந்து ஐரோப்பிய நாடுகள் வரைக்கும், "அடுத்து என்ன நடக்கும்?"னு நகத்தைக் கடிக்காத குறையா வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க!
