பராசக்தியை பதம் பார்த்த விஜய் ரசிகர்கள்: இது ஒரு "தீய சக்த்தி" ...


 மதுரையில் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' பட டிரெய்லர் வெளியீட்டின் போது, சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட பேனர்களை விஜய் ரசிகர்கள் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வரவுள்ள நிலையில், விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' படத்துடன் வேறு எந்தப் படமும் போட்டியிடக் கூடாது என்பதில் ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர். இதன் வெளிப்பாடாகவே மதுரை ரிட்சி (Richie Cinemas) திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த பராசக்தி படத்தின் போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டன.

நடிகர் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே நல்ல நட்பு நிலவி வந்தாலும், ரசிகர்களுக்கு இடையேயான இந்த மோதல் சமூக வலைதளங்களில் போர்க்களமாக மாறியுள்ளது. பராசக்தி படத்தின் போஸ்டர்களைக் கிழித்தபோது அங்கிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து வைரல் ஆக்கியுள்ளனர். தங்களுக்குப் பிடித்தமான ஹீரோவின் படத்திற்குத் தியேட்டர்கள் மற்றும் வரவேற்பில் எவ்விதப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் விஜய் ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்த வன்முறைச் செயலுக்குச் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "ஒரு திரைப்பட மோதலைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு மாற்றுக்கருத்துகளை எப்படி எதிர்கொள்வார்கள்?" என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

பொங்கல் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவதால், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே ஒருவிதப் பதற்றம் (Tension) நிலவி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post