விஜய் கிட்ட இருக்கிற அந்த 'சீக்ரெட்' ஃபைல்ஸ் : அது தான் பிரம்மாஸ்திரமா ?


ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தளபதி விஜய் கட்சி ஆரம்பிச்சப்போ, "இவரு என்னங்க பண்ணிட போறாரு? சீமான் வாங்குற 8% ஓட்டை கூட தாண்ட மாட்டாரு" அப்படின்னு பட்டிமன்றமே போட்டு பேசினாங்க. ஆனா, விஜய் நடத்துன அந்த ஒரு சில மீட்டிங்லயே கூட்டம் அள்ளுனதைப் பார்த்துட்டு, ஒட்டுமொத்த இந்தியாவே மிரண்டு போயிருச்சு. இப்போ நிலைமை என்னன்னா, 10%, 20% அப்படின்னு பேசிக்கிட்டு இருந்த அரசியல் அனலிஸ்ட் (Political Analysts) எல்லாம், கரூர் சம்பவத்துக்கு அப்புறம் விஜய் ஈஸியா 30% ஓட்டு பேங்க்கை தட்டித் தூக்கிடுவாருன்னு சொல்றாங்க. இன்னும் எலக்ஷன் டேட் கூட அனவுன்ஸ் பண்ணல, அதுக்குள்ளயே விஜய் மேல இருக்கிற எக்ஸ்பெக்டேஷன் எகிறிப் போய் நிக்குது.

விஜய் சும்மா ஒண்ணும் கையைக் கட்டிக்கிட்டு இருக்கலையாம். அவரோட கைவசம் திமுக-வோட முக்கியமான மினிஸ்டர்ஸ், மாஜி அமைச்சர்கள் பத்தின ஏகப்பட்ட ஆதாரங்கள் (Strong Evidences) இருக்கிறதா சொல்லப்படுது. நம்ம 'சர்கார்' படப் பாணியில, எலக்ஷன் கேம்பெய்ன் முடியப்போற அந்த கடைசி நாள்ல, அந்த ஆதாரங்களை ரிலீஸ் பண்ணப் போறாராம். அது காட்டுத்தீ மாதிரி தமிழ்நாடு முழுக்க பரவி, கடைசி நேரத்துல மொத்தமா 'கேம்' சேஞ்ச் (Game Changer) பண்ணிடும்னு ஒரு டாக் ஓடுது.

திமுகவில இருக்கும் ஒரு முக்கிய புள்ளி, இந்த வாட்டி சீட்டு கிடைக்கல என்கிற கடும் அதிருப்தில, சில ஆவணங்களை புசி ஆனந்த கையில கொடுத்ததா ஒரு அரசல் புரசல் டாக் இருக்கு. 

திமுக-வுக்கு என்ன பெரிய சிக்கல்னா, விஜய்யை அட்டாக் பண்றதுக்கு அவங்ககிட்ட எதுவுமே இல்லை. ஏன்னா, அவர் இதுக்கு முன்னாடி ஆட்சியில இருந்தது இல்லை, அவர் மேல ஊழல் புகாரும் கிடையாது. இதனாலயே ஆளுங்கட்சி செம கன்பியூஷன்ல (Confusion) இருக்காங்க.

இது ஒரு பக்கம் இருக்க, சென்ட்ரல்ல இருக்கிற பாஜக-வும் "விஜய் எங்க கூட கூட்டணிக்கு வந்தாலும் சரி, வராட்டாலும் சரி... எங்களுடைய மெயின் டார்கெட் திமுக-வை காலி பண்றதுதான்" அப்படின்ற மைண்ட்செட்ல இருக்காங்களாம். 

இதனால எலக்ஷனுக்கு முன்னாடியே கரூர் சம்பவம் சம்பந்தமா சிபிஐ (CBI) சில விக்கெட்டுகளைத் தூக்கப் போறாங்கன்னு வதந்தி பரவுது. அப்படி நடந்தா, அது திமுக-வுக்கு ஒரு பெரிய மைனஸா (Negative Impact) முடியும். ஒரு பக்கம் தளபதியோட 'மாஸ்' அட்டாக், இன்னொரு பக்கம் மத்திய அரசோட செக்னு ரெண்டு பக்கமும் இடி விழ வாய்ப்பு இருக்கு. 2026 ஏப்ரல் அல்லது மே மாசம் நடக்கப்போற அந்த 'ஃபைனல் மேட்ச்'ல யாரு ஜெயிக்கப்போறாங்கன்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்!


Post a Comment

Previous Post Next Post