அகதி மீது மீண்டும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: ரம் படைகள் மீண்டும் அட்டகாசம் !


அமெரிக்காவின் Minneapolis நகரில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், பெடரல் ஏஜென்ட் ஒருவர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை காலில் சுட்ட சம்பவம் பெரிய அளவில் 'tension' கிளப்பியுள்ளது. புதன்கிழமை இரவு 'Operation Metro Surge' என்ற திட்டத்தின் கீழ் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. DHS (Department of Homeland Security) தரப்பில் வெளியான தகவலின்படி, அந்த நபர் தப்பியோட முயன்றதாகவும், அதிகாரிகளைத் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு பெரிய 'scuffle' நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட வெனிசுலா நபர் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகிவிட்டு, பின்னர் தப்பியோட முயன்றார். அவரை ஏஜென்ட்கள் பிடிக்க முயன்றபோது, பக்கத்திலிருந்த ஒரு 'apartment'-லிருந்து இரண்டு பேர் வெளிவந்து 'snow shovel' (பனி மண்வெட்டி) மற்றும் துடைப்பத்தால் அதிகாரிகளைத் தாக்கத் தொடங்கினர். இந்தத் திடீர் 'ambush'-ஆல் உயிருக்கு பயந்துதான் அதிகாரி தற்காப்புக்காக அந்த நபரின் காலில் சுட்டதாக DHS விளக்கம் அளித்துள்ளது.

சுடப்பட்ட அந்த நபர் தற்போது ஆஸ்பத்திரியில் 'treatment' பெற்று வருகிறார், உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த 'incident' நடந்த இடத்தைச் சுற்றி மக்கள் அதிக அளவில் கூடிவிட்டதால் அந்த இடமே 'chaotic'-ஆக மாறியது. ஏற்கனவே கடந்த வாரம் ரெனீ குட் (Renee Good) என்ற பெண்மணி ICE அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபம் மக்களிடம் மாறாத நிலையில், இந்த அடுத்தடுத்த மோதல் நிலைமையை இன்னும் 'worse' ஆக்கியுள்ளது.

மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் (Tim Walz) இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். "மினசோட்டாவில் நடப்பவை நம்ப முடியாத அளவுக்கு உள்ளது, தயவுசெய்து இந்த ஆக்கிரமிப்பை நிறுத்துங்கள்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 'Protesters' மற்றும் போலீசாருக்கு இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளதால், Minneapolis சிட்டி முழுக்க இப்போது ஒருவிதமான பயமும் ஆத்திரமும் கலந்த சூழல் நிலவுகிறது.

Post a Comment

Previous Post Next Post