ஓனர் வெளிநாட்டில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரே மஜா யாழ்ப்பாணத்தில்



யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் சொகுசு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ரகசியமாக நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியை கோப்பாய் காவல்துறையினர் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மூன்று பெண்கள் மற்றும் வீட்டை வாடகைக்கு எடுத்த நபர் என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சொகுசு வீடானது வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமானதாகும். இதனை கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு நபர் வாடகைக்குப் பெற்று தங்கியிருந்துள்ளார். எனினும், கடந்த சில நாட்களாக இந்த வீட்டிற்குப் பல ஆண்களும் பெண்களும் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் அடிக்கடி வந்து செல்வதை அவதானித்த அக்கம் பக்கத்தினர், அங்கு ஏதோ தவறான காரியங்கள் நடப்பதை ஊகித்து காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் வழங்கியுள்ளனர்.

பொதுமக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, கோப்பாய் காவல்துறையினர் அந்த வீட்டைப் பல நாட்களாகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். சந்தேகத்தை உறுதிப்படுத்திய பின்னர், சனிக்கிழமை (ஜனவரி 10, 2026) அன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, தென்னிலங்கைப் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட மூன்று பெண்கள் அங்கு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நால்வரும் தற்போது கோப்பாய் காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள வீட்டின் உரிமையாளருக்கு ஏற்கனவே இது குறித்துப் பொதுமக்கள் அறிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில், காவல்துறையினர் நேரடியாகத் தலையிட்டு இந்தச் சட்டவிரோதச் செயலை முறியடித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post