நம்ம சுதா கொங்கரா மேடம், "ஜன நாயகன்" டீசர விட என் "பராசக்தி" டீசருக்கு தான் வியூஸ் அதிகம்னு அன்னைக்கு பீத்திகிட்டாங்க. இன்னைக்கு படம் ரிலீஸ் ஆகி, ஈ கூட ஓட்ட முடியாம பெட்டி படுக்கைய கட்டின உடனே, "விஜய் ரசிகர்கள், தான் காரணம் என்றும்... எல்லாம் ரவுடிங்க, குண்டர்கள்"னு புது ராகம் பாடுறாங்க. படம் ஓடலனா கதைய ஒழுங்கா எடுக்கணும் மேடம், அத விட்டுட்டு ரசிகர்களை திட்டினா எப்படி? அவங்க ஒன்னும் உங்க வீட்டு காசுல படம் பாக்கல, காசு குடுத்து டிக்கெட் வாங்கிட்டு வர்றவங்க!
விஷயம் என்னனா, இந்த படத்துக்கு YouTube Views அள்ளுறதுக்கு நம்ம உதயநிதி அண்ணன் கோடிக்கணக்குல வாரி இறைச்சிருக்காராம். "என் செந்தமிழுக்கு பின்னால் ஒரு பெரும் படை இருக்கு"னு பஞ்ச் டயலாக் எல்லாம் வேற. ஆனா, தியேட்டர் பக்கம் போய் பாத்தா 'படை'யும் காணோம். இப்போ டென்ஷன்ல நம்ம துணை முதல்வர் மூக்க உடைஞ்சு ஓரமா உக்காந்துருக்காரு. படமும் ஊத்திக்கிச்சு, அரசியலும் ஆட்டத்துல இல்லாம போயிடுச்சு போல!
வசூல பாத்தா தலை சுத்திருச்சுப்பா! முதல் நாள் ஏதோ 12 கோடி வந்துச்சு, அப்படியே படிப்படியா கொறைஞ்சு இன்னைக்கு வெறும் 2 கோடில வந்து நிக்குது. 171 கோடி போட்டு எடுத்துட்டு, இதுவரைக்கும் வெறும் 30 கோடி தான் வசூல் பண்ணிருக்குனா பாத்துக்கோங்களேன். அதுவும் தமிழ்நாட்டுல மட்டும் தான் இந்த நிலைமை. ஹிந்தி எதிர்ப்புனு சொல்லிட்டு இருந்ததால வெளிநாட்டில் உள்ள ஈழத் தமிழர்களும் இந்த படத்த அப்படியே கழட்டி விட்டுட்டாங்க. ஹிந்தி வேணாம்னு சொன்னா ஓகே, ஆனா அதுக்காக மொக்க படத்த பாக்கணும்னு அவசியம் இல்லையே பாஸ்!
பட்ஜெட்ல அடிச்ச கூத்த பாருங்க... சிவகார்த்திகேயன் தம்பி அமரன் ஹிட்ல இருந்த மிதப்புல 50 கோடி சம்பளம் கேட்டாராம். ஆனா இந்த டீம் 30 கோடியோட கட் பண்ணிட்டாங்க. இதுல ஜெயம் ரவிக்கு 16 கோடி, அதர்வாவுக்கு 2 கோடி, ஹீரோயினுக்கு 3 கோடினு சம்பளமே பல கோடியத் தாண்டுது. இதுல அந்தப் பழைய காலத்து செட் போடவே பாதி காசு போய்டுச்சாம். டான் பிக்சர்ஸ்னு பேரு தான், ஆனா உள்ள புகுந்து செலவு பண்ணது பூரா ரெட் ஜெயண்ட் மூவிஸ் தானாம். இப்போ 128 கோடி ரூபா நஷ்டம்னு சொன்னா ரத்தக் கண்ணீர் தான் வரும்!
மொத்தத்துல என்ன புரியுதுனா, வன்மத்த தீக்குறதுக்காகவும், அரசியல் பண்றதுக்காகவும் படம் எடுத்தா மக்கள் மண்டையிலயே தட்டுவாங்கன்னு நல்லா தெரிஞ்சு போச்சு. சுதா கொங்கரா மேடம் இப்போ நம்ம பசங்க போடுற மீம்ஸ பாத்துட்டு கன்ஃபியூஷன்ல சுத்திட்டு இருக்காங்க. சிவகார்த்திகேயன் தலையில துண்டப் போட்டுட்டு உக்காந்துருக்காரு. "சாவுக்கும் மேல ஒரு பயத்த காட்டிட்டாங்கடா"ன்ற டயலாக் தான் இப்போ ரெட் ஜெயண்ட் ஆபீஸ்ல எக்கோ அடிக்குதாம்!
