திரையரங்குகளில் பொங்கல் ரேசில் 'வா வாத்தியார்' மற்றும் 'தலைவர் தம்பி தலைமையில்' போன்ற படங்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில், ஓடிடி தளங்களும் சளைக்காமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து படைக்கின்றன. இந்த வாரம் மம்மூட்டி, விமல், திலீப் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளன.
ஓடிடி-யில் வெளியாகும் 7 படங்கள்:
களம்காவல் (SonyLIV - ஜனவரி 16): மம்மூட்டி மற்றும் விநாயயகன் நடிப்பில் உருவான விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர். கேரள-தமிழக எல்லையில் நடக்கும் தொடர் கொலைகளைச் சுற்றி கதை நகர்கிறது.
மகாசேனா (Aha Tamil - வெளியாகிவிட்டது): நடிகர் விமல் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ள இந்தப் படம் மலைவாழ் மக்களின் உணர்வுகளையும், அங்குள்ள தெய்வ நம்பிக்கைகளையும் மையமாகக் கொண்ட ஒரு ஆக்ஷன் டிராமா.
பா பா பா (ZEE5 - ஜனவரி 16): திலீப் மற்றும் வினீத் சீனிவாசன் நடித்துள்ள மலையாள அரசியல் நையாண்டி திரைப்படம். ஒரு மாநில முதல்வரின் கடத்தலைத் தொடர்ந்து நடக்கும் களேபரங்களே இதன் கதை.
அனந்தா (JioHotstar - வெளியாகிவிட்டது): அபிராமி, ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ள இப்படம் சாய்பாபாவின் பெருமைகளைச் சொல்லும் ஒரு ஆன்மீகத் திரைப்படமாகும்.
கிர்க்கன் (SunNXT - ஜனவரி 15): விஜயராகவன் மற்றும் கனி குஸ்ருதி நடிப்பில் உருவான மர்மங்கள் நிறைந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்.
குர்ரம் பாப்பரெட்டி (ZEE5 - ஜனவரி 16): நரேஷ் அகஸ்தியா மற்றும் பரியா அப்துல்லா நடித்துள்ள இந்தப் படம், இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்ளும் ஒரு கும்பல் சந்திக்கும் நகைச்சுவையான சவால்களை விவரிக்கிறது.
தி ரிப் (Netflix - ஜனவரி 16): த்ரில்லர் ரசிகர்களுக்காக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்.
