பொன்னேரி ஏரியால நாகராஜ்-பிரியானு ஒரு ஜோடி. ரெண்டு பேருக்கும் செட் ஆகாம பிரிஞ்சு வாழ்ந்துட்டு வந்திருக்காங்க. இந்த கேப்ல நம்ம பிரியாவுக்கு, 'டெலிவரி பாய்' கோபாலகிருஷ்ணன் கூட ஒரு 'ஆழமான' தொடர்பு ஏற்பட்டுருக்கு. ரெண்டு பேரும் அடிக்கடி தனிமையில சந்திச்சு ஜாலியா இருந்துருக்காங்க. ஆனா, கோபாலகிருஷ்ணன் வேலை விஷயமா வெளியூருக்குப் போக ஆரம்பிச்சது தான் வினையே! பிரியாவால ஒரு நிமிஷம் கூட 'ஆண் துணை' இல்லாம இருக்க முடியலையாம். மனுஷன் ஒரு பக்கம் உழைச்சுட்டு இருந்தா, இவங்க இங்க வேற ஒரு ரூட்டை போட்டுட்டாங்க.
கோபாலகிருஷ்ணன் இல்லாத நேரத்துல, நம்ம பிரியாவுக்கு சென்னை சேத்துப்பட்டு ரவுடி 'ஜில்லா' என்கிற ஆனந்தன் மேல ஒரு லவ்வு! இதைக் கேள்விப்பட்ட பழைய காதலன் கோபாலகிருஷ்ணன், "என்னையத் தள்ளி வச்சுட்டு வேற ஒருத்தனா? ஒழுங்கா அவன்கூட பேசுறதை கட் பண்ணு"னு போன்ல போட்டு பிரியாவை ரவுண்டு கட்டிருக்காரு. "நாமளே ரவுடி கூடத்தான் சுத்திக்கிட்டு இருக்கோம், இவன் என்ன நம்மளை மிரட்டுறது?"னு கடுப்பான பிரியா, உடனே ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்காங்க பாருங்க.. அங்க தான் ட்விஸ்ட்டே இருக்கு.
மிரட்டுற பழைய காதலனை ஓரம் கட்டணும்னு முடிவு பண்ண பிரியா, புது காதலன் ஆனந்தன் கிட்ட போய் விஷயத்தைச் சொல்லிருக்காங்க. உடனே புளியந்தோப்புல இருந்து 4 பேரு கொண்ட ஒரு 'கூலிப்படையை' ரெடி பண்ணிட்டாங்க. அப்புறம் என்ன? பழைய காதலன் கோபாலகிருஷ்ணனுக்கு போன் பண்ணி, "செல்லம்.. ரொம்ப நாளாச்சு பார்த்தே, உடனே புளியந்தோப்புக்கு வா, நாம ஜாலியா இருக்கலாம்"னு ஆசை வார்த்தை சொல்லி வரவழைச்சுருக்காங்க. அவரும் பாவம், லவ்வுன்னு நினைச்சுட்டு ஓடி வந்திருக்காரு.
ஸ்பாட்டுக்கு வந்த கோபாலகிருஷ்ணனை கூலிப்படை சுத்தி வளைச்சு அரிவாளால் செம வெட்டு! இதுல கொடுமை என்னன்னா, கள்ளக்காதலனை வெட்டும்போது கூடவே இருந்து பிரியாவும் தன் பங்குக்கு 'கைவரிசையை' காட்டிருக்காங்கனு போலீஸ் சொல்றாங்க. கடைசில கோபாலகிருஷ்ணன் அங்கேயே துடிதுடிச்சு இறந்துட்டாரு. தகவல் தெரிஞ்சு வந்த போலீஸ் இப்போ பிரியாவைக் கையும் களவுமா தூக்கிட்டாங்க. ஆனா அந்த ரவுடி ஆனந்தனும், கூலிப்படை ஆளுங்களும் இப்போ தலைமறைவு. "ஒருத்தரை சமாளிக்க முடியலனு இன்னோருத்தரை வச்சு முடிச்சுவிட்டீங்களேமா.."னு பொன்னேரி மக்களே மிரண்டு போயிருக்காங்க!
