இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் ரிலீஸாகும் முன்பே இணையத்தில் லீக் ஆகிவிட்டதா என்ற பரபரப்பு கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. இந்த பயத்தின் காரணமாக, இயக்குனர் சுதா கொங்கரா அவசர அவசரமாக நீதிமன்றத்தை நாடி, படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை உத்தரவு (Stay Order) வாங்கியுள்ளார். படம் ரிலீஸாவதற்கு முன்பே இப்படி ஒரு 'Legal Move' எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இந்த திடீர் பதற்றம்? பொதுவாக பெரிய படங்கள் ரிலீஸாகும் போது, வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களுக்கு Qube போன்ற டிஜிட்டல் பிளாட்பார்ம்கள் வழியாக முன்கூட்டியே படப் பிரதிகள் (Prints) அனுப்பப்படும். பராசக்தி படக்குழுவும் தணிக்கை சான்றிதழ் எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டு தியேட்டர்களுக்கு படப் பிரதிகளை அனுப்பிவிட்டனர். அங்கிருந்து யாராவது ரகசியமாக படத்தைப் பதிவு செய்து இணையத்தில் கசியவிட்டு விடுவார்களோ என்ற Piracy Fear தான் படக்குழுவை இப்போது தூக்கமில்லாமல் செய்துள்ளது.
இன்னொரு பக்கம், தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழுவினர் இந்த விஷயத்தில் ரொம்பவே உஷாராக செயல்பட்டுள்ளனர். ஜனவரி 9-ம் தேதி படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என்பது அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே தெரிந்ததால், அவர்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. வெளிநாட்டு தியேட்டர்களுக்கு அவர்கள் படத்தின் டிஜிட்டல் பிரதிகளை அனுப்பவே இல்லை. இதனால் பைரசி ஆபத்திலிருந்து ஜனநாயகன் தப்பித்துவிட்டது என்றே சொல்லலாம்.
இருப்பினும், கடைசி நேரத்தில் படம் வராததால் சில வெளிநாட்டு தியேட்டர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட 'Fine' கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாகத் தெரிகிறது. ஒரு பக்கம் 'பராசக்தி' டீம் ஆன்லைன் லீக் பயத்தில் கோர்ட் படியேற, இன்னொரு பக்கம் 'ஜனநாயகன்' டீம் ரிலீஸ் தள்ளிப்போன நஷ்டத்தை சமாளிக்க போராடி வருகின்றனர். மொத்தத்தில், இந்த பொங்கல் ரேஸ் தியேட்டருக்கு வரும் முன்பே பெரிய போராட்டமாக மாறிவிட்டது!
