'Oreshnik' ஏவுகணையால் புதின் நடத்திய 'Revenge Strike'! கிடுகிடுக்கும் ஐரோப்பா


 ரஷ்ய அதிபர் புதினின் இல்லத்தையே உக்ரைன் குறிவைத்ததாக கிளம்பிய புகாரைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை உக்ரைன் மீது ரஷ்யா தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. சுமார் 8,000 mph வேகத்தில் சீறிப்பாயும், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வல்லமை கொண்ட Oreshnik missile மூலம் உக்ரைனின் லிவிவ் (Lviv) பகுதியில் ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த sinister ரக ஏவுகணை தாக்கியதில் இரவு வானமே இளஞ்சிவப்பு நிறமாக மாறியதோடு, பெரும் தீப்பிழம்புகள் அந்தப் பகுதியையே உலுக்கின.

நேட்டோ (NATO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக்கு மிக அருகிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய நிலத்தடி எரிவாயு சேமிப்பு நிலையத்தையே குறிவைத்து இந்த menacing attack நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. டிசம்பர் இறுதியில் புதினின் வாடாய் (Valdai) இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதற்குப் பதிலடியாகவே இந்த massive strike மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும், புதின் இல்லத்தின் மீது தாங்கள் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை என்றும், இது ரஷ்யாவின் அப்பட்டமான பொய் என்றும் உக்ரைன் தரப்பு மறுத்துள்ளது. ரஷ்யாவின் ஆஸ்ட்ராகான் (Astrakhan) பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த 'அசுர' ஏவுகணை, வெறும் 15 நிமிடங்களுக்குள் சுமார் 900 மைல்கள் கடந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பிறந்த ஊரான கிரிவி ரிஹ் (Kryvyi Rih) மற்றும் தலைநகர் கீவ் நகரங்களிலும் ரஷ்யா இன்று மரண பயத்தைக் காட்டியுள்ளது.

இந்த 'unstoppable' என்று அழைக்கப்படும் Oreshnik ஏவுகணையைப் பயன்படுத்துவது இது இரண்டாவது முறை மட்டுமே. கடந்த 2024-ல் டினிப்ரோவில் இது சோதனை முயற்சியாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது முழு வீச்சில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் உருக்குலைந்துள்ளதோடு, நேட்டோ நாடுகளின் போர் விமானங்கள் தயார் நிலைக்கு வந்துள்ளன. அடுத்தகட்டமாக இந்த போர் அணு ஆயுதப் போராக மாறுமா என்ற பீதி இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post