நடுக்கடலில் ‘பாகுபலி’ ரேஞ்ச் WAR: ரஷ்ய கொடி பறந்தும் கப்பலை சூழ்ந்த அமெரிக்கப் படைகள்

அட்லாண்டிக் பெருங்கடலில் உச்சகட்ட பதற்றம்: ரஷ்யக் கொடியுடன் தப்பிக்கும் எண்ணெய் கப்பலைச் சூழ்ந்த அமெரிக்கப் படைகள்.

UPDATED 13:55 LONDONகப்பலுக்கு உள்ளே அமெரிக்க படைகள் இறங்கி விட்டார்கள் என்ற அறிவித்தலை ருயிட்டர் செய்திச் சேவை உறுதி செய்துள்ளது

UPDATED : 13:50 London: ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல், பெல்லா கப்பலுக்கு அருகாமையில் வந்து விட்டது. இந்த கப்பலை காப்பாற்ற, இதனை அறிந்த அதிபர் ரம், கப்பலில் சென்று திரத்திப் பிடிக்க பல மணி நேரம் ஆகும் என்பதால், ஹெலியில் மீண்டும் படையை அனுப்பியுள்ளார். இதனால் நடுக் கடலில் பெரும் களோபர நிலை தோன்றியுள்ளது. ரஷ்யா இது தனது கப்பல் என்று அறிவித்தும் ரம் தனது படைகளை அனுப்பியுள்ளார் என்பது, மிகவும் பதற்றமான விடையம். 

UPDATED 13:30 LONDON: வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாகப் பயணிப்பதாகக் கருதப்படும் ஒரு பிரம்மாண்ட எண்ணெய் கப்பலை (Oil Tanker) அட்லாண்டிக் பெருங்கடலில் வைத்து சிறைபிடிக்க அமெரிக்கப் படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 'பெல்லா 1' (Bella 1) என்று முன்பு அழைக்கப்பட்ட இந்தக் கப்பல், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகத் தற்போது தனது பெயரை 'மரினேரா' (Marinera) என மாற்றிக்கொண்டு, ரஷ்யக் கொடியுடன் பயணித்து வருகிறது.

இந்தக் கப்பல் சர்வதேசக் கடல் விதிகளை மீறிச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டும் அமெரிக்கா, அதனுள் அதிரடியாக நுழைந்து (Boarding) அதைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் சிறப்புப் படைகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அட்லாண்டிக் கடற்பரப்பில் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், அந்தப் பகுதியில் ரஷ்யப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பது நிலைமையை மிகவும் சிக்கலாக்கியுள்ளது. ரஷ்யக் கொடி ஏந்திய ஒரு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது நேரடிப் போருக்கு வழிவகுக்கும் என்பதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.

தற்போது அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்புயல் காரணமாக, அமெரிக்கப் படைகளால் கப்பலுக்குள் உடனடியாக நுழைய முடியவில்லை. அதே வேளையில், அமெரிக்காவின் பிடியில் இருந்து இந்தக் கப்பலை எப்படியாவது பாதுகாத்து ரஷ்ய எல்லைக்குள் கொண்டு செல்ல ரஷ்யக் கடற்படை முகாமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவின்படி, வெனிசுலாவின் வருவாயைத் தடுக்கும் நோக்கில் இந்த 'பிளாக்' (Blockade) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடுக்கடலில் இரு வல்லரசு நாடுகளின் படைகளும் நேருக்கு நேர் மோதும் சூழலில் இருப்பதால், இந்தப் பகுதி தற்போது ஒரு போர்க்களமாகவே மாறியுள்ளது. இந்தக் கப்பல் எந்த நாட்டின் பிடியில் சிக்கப்போகிறது அல்லது இது உலகளாவிய மோதலாக உருவெடுக்குமா என்பது அடுத்த சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், கடல்சார் பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post