தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' சாதனையும்.. திமுகவின் 'செக்'கும்! "எத்தனை கோடி செலவு செஞ்சாலும் பரவாயில்லை, ஆனா விஜய்யின் கடைசிப் படம் தோத்துப்போகணும்" - இதுதான் இப்போ உதயநிதி ஸ்டாலினின் ரகசியத் திட்டமா என கோலிவுட் வட்டாரமே கிசுகிசுக்கிறது. தளபதி விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' ட்ரெய்லர் ரிலீஸாகி, இன்டர்நெட்டை ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்கு. ரிலீஸான இரண்டே நாள்ல 39 மில்லியன் (3.9 கோடி) வியூஸை அள்ளி செம்ம மாஸ் காட்டியிருக்கு. ஆனா, விஜய்யோட இந்தச் சாதனையை உடைக்கவே உதயநிதி தரப்பு பலமான ஸ்கெட்ச் போட்டு இறங்கியிருக்காங்க போல!
ஆர்கானிக் கூட்டமா? இல்ல காசு கொடுத்து வாங்கிய வியூஸா? விஜய்யின் சாதனையை முறியடிக்க 'பராசக்தி' படத்தோட ட்ரெய்லரை களத்துல இறக்கினாங்க. இது 24 மணி நேரத்துலயே 40 மில்லியன் வியூஸை தொட்டு 'ஜனநாயகன்' சாதனையை ஓவர்-டேக் பண்ணிடுச்சு. ஆனா இங்கதான் ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கு! விஜய்யோட ரெக்கார்டை பிரேக் பண்ணணும்னே யூடியூப் (YouTube) நிறுவனத்துக்கு உதயநிதி தரப்பு பல கோடிகளை விளம்பரப் பணமா (Promotions) கொட்டிக் கொடுத்திருக்காங்களாம்.
"ஜனநாயகன் ட்ரெய்லர் தானா வந்த ஆர்கானிக் (Organic) கூட்டம், ஆனா பராசக்தி ட்ரெய்லரோ காசு கொடுத்துக் கூட்டிய கூட்டம்"னு யூடியூப் வாசிகளே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. "விஜய் மாநாட்டுக்குதான் காசு கொடுத்து ஆட்களைக் கூட்டிட்டு வந்தீங்கன்னு சொன்னீங்க.. இப்போ உங்க படத்துக்கேவா?"-னு விஜய் ரசிகர்கள் உதயநிதியை வச்சு செய்றாங்க.
சிவகார்த்திகேயன் பலியாடா? தணிக்கையில் நடக்கும் அரசியல்! நடிகர் சிவகார்த்திகேயன் என்னவோ, "நானும் விஜய்யும் அண்ணன் தம்பி, எங்களுக்குள்ள போட்டியே இல்லை"னு சமாதானம் சொன்னாலும், வசமா உதயநிதியிடம் சிக்கிக்கொண்டார் போலத்தான் தெரியுது. விஜய்யின் அரசியல் ஆசையை முளையிலேயே கிள்ளணும்னு திமுக அரசு ரொம்பவே கண்ணும் கருத்துமா இருக்காங்க.
அதுக்கு ஒரு பெரிய சாட்சி என்னன்னா, 'ஜனநாயகன்' படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) தராமல் இழுத்தடிக்கிறதுதான். சரியா விஜய்க்கு 39 மில்லியன் வரும்போது, அடுத்த படத்துக்கு 40 மில்லியன் வரணும்னு ப்ளான் பண்ணி காசு வீசுறதுக்கு பதிலா, அந்தப் பணத்தை தமிழ்நாட்டு ஏழைகளுக்குக் கொடுத்தா புண்ணியமாப் போகும்னு மக்கள் பேசிக்கிறாங்க!
