மினியாபோலிஸ் நகரில் நடக்கும் போராட்டத்தை அடக்க, அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த நான் தயங்க மாட்டேன் என்று, சற்று முன்னர் அதிபர் ரம் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப் அங்கிருக்கும் நிலைமையைக் கட்டுப்படுத்த 'Insurrection Act'-ஐ கையில் எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.
"மினசோட்டாவின் ஊழல் அரசியல்வாதிகள் சட்டத்தை மதித்து, போராட்டக்காரர்களைத் தடுக்கவில்லை என்றால், நான் 'Insurrection Act'-ஐ அமல்படுத்தி அமெரிக்க ராணுவத்தை (military) அங்கே இறக்குவேன்" என்று டிரம்ப் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் (Tim Walz) இந்த நடவடிக்கையை 'organized brutality' என்று கடுமையாக விமர்சித்துள்ளார். "இது குடியேற்ற விவகாரம் என்பதைத் தாண்டி, மத்திய அரசு எங்களது மக்கள் மீது நடத்தும் ஆக்கிரமிப்பாக மாறிவிட்டது" என்று அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். போராட்டக்காரர்கள் மீது 'tear gas' மற்றும் ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதால், மினியாபோலிஸ் நகரில் ஒருவிதமான 'war-like' சூழல் உருவாகியுள்ளது.
Source : https://www.wsj.com/politics/policy/trump-minnesota-insurrection-act-98e11761?mod=hp_lead_pos8
