மதுரோவை தூக்கின அந்த செக்கன்: அதனால் இப்ப இந்திய பாதுகாப்பும் கேள்விக் குறிதான்


வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா தூக்கிய அந்த நிமிஷங்களில், ஏன் அவங்க நாட்டு ரேடார் எதுவுமே வேலை செய்யல? இதுதான் இப்போ உலகத்தோட ஹாட் டாபிக்

மதுரோ ஐயா தன்னோட நாட்டுல ரஷ்யா கிட்ட இருந்து வாங்குன S-300 ஏர் டிஃபன்ஸ் சிஸ்டம் இருக்கு, ஒரு காக்கா கூட உள்ள நுழைய முடியாதுன்னு ரொம்ப சீன் போட்டுட்டு இருந்தாரு. ஆனா அமெரிக்கா 'EA-18G Growler' அப்படின்ற ஜாமிங் மிஷினை வச்சு, ஐயாவோட ரேடார்ல டிஜிட்டல் முறையில 'பல்டி' அடிக்க வச்சுட்டாங்க. ரேடார் கண்ணை மறைச்சு,  அமெரிக்க ஸ்பெஷல் போர்ஸ் ஹெலிகாப்டர்ல வந்து, மதுரோவை தூக்கிட்டுப் போய் கார்ல உட்கார வச்சுட்டாங்க.

இதுல ஹைலைட் என்னன்னா, அதே S-300 மற்றும் S-400 ஏர் டிஃபன்ஸ் சிஸ்டத்தை தான் இந்தியாவும் ரொம்ப நம்பி இருக்கு. ஆனா வெனிசுலாவுல இந்த சிஸ்டம் எப்படி 'டேமேஜ்' ஆச்சோ, அதே மாதிரி இந்தியாவோட பாதுகாப்பும் இப்போ 'வீக்' ஆகிடுமோன்னு ஒரு டவுட் கிளம்பிருக்கு. அமெரிக்கா கிட்ட இருக்குற 'ஹைடெக்' ஜாமிங் டெக்னாலஜியை வச்சு, இந்த ரஷ்யா மிஷினை ஈஸியா 'கன்ஃபியூஸ்' பண்ணிட முடியுமாம். "என்னப்பா இது... கோடிக்கணக்குல காசை கொட்டி குடுத்து, கடைசில அமெரிக்கா ஜாம் வச்சு நம்ம மிஷினை நக்கிட்டு போயிடுவானோ?"ன்னு இந்திய ராணுவ வட்டாரத்துல ஒரு சின்ன கலக்கம். ரஷ்யா கொடுத்த அந்தப் பொம்மையை வச்சு பாகிஸ்தானை வேண்டுமானால் பயமுறுத்தலாம், ஆனா அமெரிக்கா கிட்ட அது 'வேஸ்டு பீஸ்' தான்னு இப்போ வெட்ட வெளிச்சமாகிடுச்சு.

நம்ம ஊர்ல 'பராசக்தி' படத்துக்கு எஸ்கே-வுக்கு வராத கலெக்ஷன் மாதிரி, ரஷ்யா கொடுத்த இந்த ஏர் டிஃபன்ஸ் சிஸ்டத்துக்கும் இப்போ 'ரிவியூ' ரொம்ப மோசமா இருக்கு. "ஏண்டா... 'ஜனநாயகன்' படத்தை நிறுத்துறதுக்கு ரூம் போட்டு யோசிச்சு செலவு பண்ற பணத்துல, கொஞ்சத்தையாவது எடுத்து இந்தியப் பாதுகாப்புக்குச் செலவு செய்யுங்கப்பான்னு ரசிகர்கள் இப்போ கமெண்ட்ஸ்ல வச்சுச் செய்றாங்க! ஏன்னா, அமெரிக்காவோட இந்த ஜாமிங் சிஸ்டம் மட்டும் பாகிஸ்தான் கைக்குப் போச்சுன்னா, நம்ம ஏர் டிஃபன்ஸ் நிலைமை 'அதோ கதி' தான் போல! ஊசி போற இடத்தைப் பார்த்துட்டு, உலக்கை போற இடத்தைப் பார்க்காம இருக்குற இந்த ஒன்றிய அரசுக்கு யாருப்பா புரிய வைக்கிறது? என்ன சொல்ல... நிலைமை அப்படி இருக்கு!"


Post a Comment

Previous Post Next Post