டொனால் ரம்பின் புது ரூட்டு: பணத்தைக் கொடுத்து 'தீவை' தூக்க ஸ்கெட்ச்


நம்ம ட்ரம்ப் மாம்ஸ் இப்போ ரியல் எஸ்டேட் பிசினஸ்ல இருந்து ஒரு படி மேல போயிட்டாரு போல! "கிரீன்லாந்து தீவை எனக்கு வித்துடுங்க"னு டென்மார்க் கிட்ட கேட்டதுக்கு, அவங்க "போடா அங்கட்டு"னு சொல்லிட்டாங்க. உடனே மாம்ஸ் என்ன பண்ணிருக்காரு தெரியுமா? நேரடியா அங்க இருக்குற மக்களுக்கே "லஞ்சம்" கொடுக்க ஐடியா பண்ணிட்டாரு!

 "நீங்க எங்ககூட வந்துடுங்க... ஆளுக்கு 10,000 டாலர்ல இருந்து 1,00,000 டாலர் வரைக்கும் (அதாவது நம்ம ஊரு காசுக்கு பல லட்சங்கள்!) கையில ரொக்கமா தர்றேன்"னு ஒரு மெகா பிளானை போட்டிருக்காரு. 'ஓட்டுக்கு காசு' கொடுக்குற கதையெல்லாம் இப்போ உலக லெவலுக்குப் போயிருச்சு போல!

இந்த பிளானை கேட்டதும் டென்மார்க்கும் கிரீன்லாந்தும் செம காண்டுல இருக்காங்க. கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபெடெரிக் நீல்சன் (Jens-Frederik Nielsen) என்ன சொல்லிட்டாருன்னா, "போதும் மாம்ஸ் உன் ஃபேண்டஸி... இதோட நிறுத்திக்கோ! கிரீன்லாந்து ஒன்னும் சேல்ஸ்க்கு இல்லை"னு ஃபேஸ்புக்லயே போட்டுத் தாக்கிட்டாரு. 

ஆனா ஒயிட் ஹவுஸ் தரப்புல என்ன சொல்றாங்கன்னா, "நாங்க சும்மா ஜாலிக்கு கேட்கல... ரஷ்யா, சைனா இவங்ககிட்ட இருந்து நாட்டை காப்பாத்தத் தான் நாங்க வர்றோம்"னு ஒரு சென்டிமென்ட் சீனை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. 'நண்பேன்டா'னு சொல்லிட்டு இருந்த நேட்டோ (NATO) டீம்க்குள்ளயே இப்போ அடிதடி நடக்குற ரேஞ்சுக்கு விஷயம் போயிட்டு இருக்கு!

ஒரு பக்கம் நம்ம ஊரு பையன் ஜே.டி வான்ஸ் (JD Vance) வேற, "டென்மார்க் சரியா நாட்டை பாத்துக்கல, அதான் ட்ரம்ப் உள்ள வராரு"னு அவங்க வேலையை இவங்களே செய்யப் போறதா கம்பு சுத்துறாங்க. இந்த 'பணத்தைக் கொடுத்து தீவை வாங்குற' மேட்டர் இப்போ இண்டர்நேஷனல் லெவல்ல ஒரு பெரிய காமெடி த்ரில்லரா ஓடிக்கிட்டு இருக்கு. 

ஒருவேளை கிரீன்லாந்து மக்கள் இந்த காசை வாங்கிட்டா, ட்ரம்ப் மாம்ஸ் அங்க போய் ஒரு பெரிய கோல்ப் கோர்ஸ் கட்டிடுவாரோன்னு தான் எல்லாரும் பயப்படுறாங்க. மொத்தத்துல "காசு கொடுத்து காரியம் சாதிக்கப் பாக்குற" இந்த ட்ரம்ப் மாம்ஸின் ஸ்ட்ராட்டஜி இப்போ உலகத்தையே அதிர வச்சிருக்கு!

Post a Comment

Previous Post Next Post