தனக்கு கிடைக்கும் சம்பளப் பணம் மொத்தத்தையும் அறக்கட்டளைக்கு(Charity) வழங்கி வருகிறார் ரிஷி சுண்ணக் என்பது பலருக்கு தெரியாது.
முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அரசியலுக்குப் பிறகு டெக் உலகில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தற்போது அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த Anthropic என்ற முன்னணி AI (Artificial Intelligence) நிறுவனத்தில் 'சீனியர் அட்வைசர்' (Senior Adviser) ஆகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிறுவனம் கூகுளின் ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி-க்கு சவாலாக 'Claude' என்ற ஏஐ மாடலை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக்கின் இந்த புதிய வேலை குறித்த சுவாரசியமான தகவல் என்னவென்றால், அவர் ஒரு வருடத்தில் வெறும் 70 மணிநேரம் மட்டுமே இந்த நிறுவனத்திற்காகப் பணியாற்றப்போகிறார். இதற்காக அவருக்கு சுமார் 3,73,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல்) சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது ஒரு மணிநேர உழைப்பிற்கு லட்சக்கணக்கில் வருமானம்! ஆனால், இந்த முழுத் தொகையையும் அவரும் அவர் மனைவி அக்சதா மூர்த்தியும் இணைந்து நடத்தும் 'The Richmond Project' என்ற அறக்கட்டளைக்கு (Charity) தானமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
வெறும் அரசியலோடு நின்றுவிடாமல், உலகப் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) போன்ற ஜாம்பவான் நிறுவனங்களிலும் ரிஷி சுனக் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், சண்டே டைம்ஸ் (Sunday Times) பத்திரிகையில் கட்டுரையாளராகவும், உலக நாடுகளில் நடக்கும் மாநாடுகளில் உரையாற்றுவதன் மூலமும் சுமார் 7,50,000 பவுண்டுகள் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
அமெரிக்காவிலேயே அவர் செட்டில் ஆகிவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தனது தொகுதியான யோர்க்ஷயரில் அதிக நேரம் செலவிடப்போவதாக அவர் கூறியுள்ளார். "யாருக்காவது நான் தேவையென்றால் நான் யோர்க்ஷயரில் இருப்பேன்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பப் புரட்சி நம் வாழ்க்கையை மாற்றும் என்று நம்பும் ரிஷி, ஒரு Tech Guru-வாக இப்போது சர்வதேச அளவில் மதிக்கப்படுகிறார்.
