நீதிபதியும் தி.மு.க ஆளா ? ஜன நாயகன் படத்திற்கு பெரும் சிக்கல்


ஜனநாயகன் படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதி ஏன் ஒத்தி வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தை பிறந்தால் வழி பிறக்குமே என்று கூறிய நீதிபதி பிடி ஆஷா, மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை  ஒத்தி வைத்தார். இன்று(7) மறுபடியும் விசாரணைக்கு வருகிறது. அதாவது பராசக்த்தி வெளியாகும் நாளில் ஜன நாயகனையும் வெளியிட வைப்பதில் நீதிபதிக்கு பெரும் ஆர்வம் உள்ளது தெரிகிறது.

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய நிலையில், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) கிடைக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கை குழு அறிவுறுத்தியபடி தேவையற்ற காட்சிகளை நீக்கி, வசனங்களை மியூட் செய்து மீண்டும் சமர்ப்பித்த பிறகும், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, படத்தில் சில மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளதால், மறு ஆய்வுக்காகப் படம் தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, "ஜனநாயகன் ரிலீஸை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே?" என்று நகைச்சுவையாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் கேள்வி எழுப்பினார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ரிலீஸ் தேதி முடிவானாலும் தாங்கள் சட்டப்படிதான் செயல்பட முடியும் என்று வாதிட்டதால், மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வழக்கின் விசாரணை நாளைக்கு (ஜனவரி 7) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி ஜனவரி 9-ல் படம் வெளியாகுமா அல்லது பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் தள்ளிப் போகுமா என்பது நாளை தெரிந்துவிடும்.

Post a Comment

Previous Post Next Post