கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்வீடனின் மால்மோ (Malmö) நகரில் பிரிட்டிஷ் டிராவல் ஏஜெண்டுகளான ஜுவான் சிஃபுவெண்டஸ் (Juan Cifuentes) மற்றும் ஃபாரூக் அப்துல்ரசாக் (Farooq Abdulrazak) ஆகியோர் வாடகை காரில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
அன்றில் இருந்து இன்றுவரை, 26 வயது இளைஞர் ஒருவரை, ஸ்வீடன் பொலிசார் தேடி வந்த நிலையில். அவர் ஸ்வீடனில் இருந்து தப்பி லெபனான் சென்றிருந்தார் என்பது தெரியவந்தது. அவரை தொடர்ந்தும் பொலிசார் தேடி வந்தார்கள்.
உலகையே உலுக்கிய இந்த கொடூரக் கொலையில் தேடப்பட்டு வந்த 26 வயதுடைய முக்கிய குற்றவாளி (Lead Suspect), தற்போது லெபனானில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஸ்வீடன் வழக்கறிஞர்கள் உறுதி செய்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அவர்கள் பயணித்த Toyota RAV4 கார் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரட்டைக் கொலையைச் செய்த பிறகு, மால்மோவைச் சேர்ந்த அந்த 26 வயது மர்ம நபர் அதிகாரிகளிடம் சிக்காமல் லெபனானுக்குத் தப்பியோடி தலைமறைவானார். ஸ்வீடன் மற்றும் லெபனான் இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் (Extradition Agreement) இல்லாததால், அவரைப் பிடிப்பதில் பெரும் சிக்கல் நீடித்தது.
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், சிரியா நாட்டின் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தித் தலைமறைவாக இருந்துள்ளார். இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் மாதம் அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து லெபனான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பெற்று வந்த அந்த நபர், தற்போது உயிரிழந்துவிட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த முக்கிய குற்றவாளியை நேரில் விசாரணை செய்யும் வாய்ப்பை ஸ்வீடன் காவல்துறை இழந்துள்ளது. அந்த நபர் தனது பதின்ம வயதிலிருந்தே பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் (Criminal activity) ஈடுபட்டு வந்தவர் என்றும், காவல்துறை கண்காணிப்பில் இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட ஜுவான் மற்றும் ஃபாரூக் ஆகிய இருவருக்கும் எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என்றும், அவர்கள் தொழில் நிமித்தமாகவே அங்கு சென்றார்கள் என்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
முக்கிய குற்றவாளி கொல்லப்பட்டாலும், இந்த இரட்டைக் கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்வீடன் மற்றும் பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு நபர் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக (Aiding and abetting) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த "Assassination" பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த துப்பாக்கியால் குற்றவாளி 2 நபர்களைக் கொலை செய்தாரே, அதே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விட்டார். நீங்கள் செய்யும் பாவங்கள் ஒருபோதும் உங்களை பின் தொடராமல் விடப்போவது இல்லை என்பது உண்மை தானோ என்று தோன்றுகிறது
