கீழே வீடியோ இணைப்பு
ஒரு நாட்டுக்கு உள்ளே சட்டவிரோதமாகப் புகுந்து, அந்நாட்டின் தலைவரைக் கைது செய்வது என்பது ஐ.நா. சாசனத்தின் (UN Charter) படி பெரும் குற்றமாகும். சர்வதேச விதிமுறைகளை இப்படி அமெரிக்கா பல தடவை மீறியுள்ளது. ஆனால், உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத் தானே அது சொல்லிக் கொள்கிறது. நியூயார்க் நகருக்குக் கொண்டு வரப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் நியூயார்க் நீதிமன்றில் வழக்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேலும், இதனைக் கூட அரசியல் ஆக்கியுள்ளது ட்ரம்ப்பின் நிர்வாகம் (Administration). ஏன் நியூயார்க் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அங்கேதான் அனைத்து ஊடகங்களும் உள்ளன. உலகில் உள்ள மொத்த ஊடகங்களின் தலைமையகம் (Headquarters) இருக்கும் இடம் நியூயார்க். அங்கே என்ன நடந்தாலும் அந்தச் செய்தி உலகளாவிய ரீதியில் பேசப்படும்.
பல மடங்கு சரிந்து வந்த டொனால்ட் ட்ரம்ப்பின் செல்வாக்கைத் தூக்கி நிலைநிறுத்த, ட்ரம்ப் இப்படியான ஒரு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்ற கருத்தும் வலம் வருகிறது. அமெரிக்க மாநிலங்கள் அனைத்திலும் ட்ரம்ப்பின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்த நிலையில் உள்ளது. இதனைச் சரிசெய்யவே இந்த நடவடிக்கை என்றும், மேலும் வழக்கைத் தொடுத்து அடிக்கடி ஜனாதிபதி மதுரோவைக் காட்டி ட்ரம்ப் அரசியல் லாபம் தேடுகிறார் என்பதே அமெரிக்கர்களது பொதுவான கருத்தாக உள்ளது.
