வெனிசுலாவில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமெரிக்கா நிறுவியுள்ளது. Delcy Rodriguez என்னும் பெண் அரசியல்வாதி தலைவார பொறுப்பை ஏற்றுள்ளார். அவர் இன்று(04) பதவியேற்ற நிலையில், அமெரிக்க அதிபர் ரம் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
என்னடா அதிபர் ரம்பால் உருவாக்கப்பட்ட அரசு தலைவர், ரம்பை பற்றியே பேசுகிறார் என்று நினைக்க வேண்டாம். இது அமெரிக்க ஆதரவு மீடியாக்கள் சொல்லும் செய்தி. ஏன் எனில் வெனிசுலாவில் உள்ள மக்கள், இன்னும் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.
எனவே இந்த நிலையில் தற்காலிகமாக பொறுப்பை ஏற்றுள்ள தலைவர், அமெரிக்கா பக்கம் சாய்ந்தால், அவர் அமெரிக்க ஆதரவாளர் என்ற பட்டம் கிடைத்து விடும். பின்னர் நடக்க உள்ள தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியாது. இதன் காரணத்தால் தான் அமெரிக்கா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட்டுள்ளது என்பது தெரிகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவை விட அந்நாட்டின் துணை அதிபர் Delcy Rodriguez (56) அதிகாரத்தில் இருக்க விரும்புவதாகவும், அவர் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
