தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பக்கத்துல இருக்குற திரையரங்குல, ரசிகர்கள் ஆசையா வச்ச 70 அடி உயரமான அந்தப் பிரம்மாண்ட நிழற்படத் தட்டியை, முறையான அனுமதி இல்லைன்னு சொல்லி காவல்துறையினர் அவசர அவசரமா அள்ளிக்கிட்டு போயிருக்காங்க. தூத்துக்குடி மட்டும் இல்லாம, ராமநாதபுரம் மற்றும் திருச்சி பேருந்து நிலையம்னு பல இடங்கள்ல ஜனநாயகன் படப் பதாகைகளைத் தேடித்தேடி அகற்றுவது பெரிய பரபரப்பைக் கிளப்பிருக்கு. திரையரங்குக்கு உள்ளே இருக்குற பதாகையைக்கூட விடாம இப்படிப் பிடுங்குறது ரசிகர்களைச் செம காண்டாக்கி இருக்கு.
இதே ஊர்ல 'பராசக்தி' படத்துக்காக வச்ச எந்த ஒரு பதாகையையும் இதுவரை காவல்துறையினர் தொடவே இல்லை. குறிப்பா சென்னை வள்ளுவர் கோட்டம் பக்கத்துல மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்குற இடத்துல 50 அடி உயரத்துல ஆபத்தான முறையில பராசக்தி பதாகை இருக்கு, அதை ஏன் அதிகாரிகள் கண்டுக்கல? திரையரங்கு எல்லைக்குள்ள இருக்குற ஜனநாயகன் பதாகையை மட்டும் குறி வைக்கிறது, ஆளும் திமுக அரசு விஜய்யோட வளர்ச்சியைப் பார்த்து எந்த அளவுக்குப் பயப்படுதுங்கிறதை அப்பட்டமா காட்டுது.
பதாகைகளை அகற்றும்போது திருச்சி காவல்துறையினர் செஞ்ச அலும்பு இன்னும் கொடுமை. "டேய் படமே வராது, இதுல உங்களுக்கு எதுக்குடா 40அடி பதாகை?"னு சொல்லி நக்கல் பண்ணிருக்காங்க. அரசாங்கம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து இப்படிச் சண்டித்தனம் பண்ணிக்கிட்டே இருக்கு. ஆனா ஒன்னு, விஜய்யை எந்தளவுக்கு இப்படி மட்டை பண்ணப் பாக்குறாங்களோ, அந்தளவுக்கு மக்கள் மத்தியில அவரோட செல்வாக்கு ஏறிக்கிட்டே போகுதுங்கிறதை திமுக ஏனோ கவனிக்கத் தவறுது.
ஒரு சினிமா படத்தையே அரசியலாக்கி, அதுக்குத் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்காம இழுத்தடிக்கிறது என்ன நியாயம்? "நீதிமன்றம் எங்களை கேள்வி கேட்க முடியாது"ன்னு சொல்ற தணிக்கைக் குழு, உண்மையிலேயே நேர்மையா தான் நடக்குதான்னு சந்தேகம் வருது. இதையெல்லாம் மக்கள் உன்னிப்பா கவனிச்சுட்டு தான் இருக்காங்க. என்னதான் முடக்கப் பார்த்தாலும், மக்கள் கிட்ட இருக்குற நியாயம் இவங்களுக்குப் புரியலையாங்கிறது தான் இப்போதைய பெரிய கேள்வியா இருக்கு.
