லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டம் உலகையே அதிர வைத்துள்ளது. ஆவேசமடைந்த ஈரான் போராட்டக்காரர் ஒருவர், தூதரகத்தின் பால்கனியில் ஏறி அங்கிருந்த ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வக் கொடியைக் கிழித்து எறிந்தார். அதற்குப் பதிலாக, 1979 புரட்சிக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த, மன்னராட்சிக் காலத்து 'Lion and Sun' கொடியை அங்கே பறக்கவிட்டார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்த மெட் போலீஸார் (Metropolitan Police) அதிர்ச்சியடைந்து, கூடுதல் படைகளை வரவழைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஈரானில் பொருளாதாரச் சரிவு மற்றும் அடக்குமுறைக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம், இப்போது லண்டன் வீதிகளிலும் 'அக்கினி'யாய் பரவி வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Dஒனல்ட் Tரும்ப்) வெளியிட்டுள்ள அறிக்கை, ஈரான் அரசுக்கு ஒரு பெரும் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது. . "அப்பாவி போராட்டக்காரர்களை ஈரான் அரசு சுட்டுக் கொன்றால், நாங்களும் சுட ஆரம்பிப்போம்" என்று ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த நாட்டு மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானில் இணையச் சேவை (Internet) முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை சுமார் 65-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், 2300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி நாட்டுத் தலைவர்கள் இணைந்து, ஈரான் அரசு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், ஈரான் தரப்போ, "இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூண்டிவிடும் சதி" என்று பழைய பல்லவியையே பாடி வருகிறது.
ஈரானின் இந்த இக்கட்டான நிலையைப் பார்த்து, சோஷியல் மீடியா நிறுவனமான 'X' (முன்னாள் Twitter) ஒரு அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வ ஈமோஜி (Emoji) கொடியை நீக்கிவிட்டு, போராட்டக்காரர்கள் விரும்பும் அந்தப் பழைய 'சிங்கக் கொடியை' (Lion and Sun) உலகம் முழுவதும் அப்டேட் செய்துள்ளது.
இது ஈரான் அரசுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. "இப்படியே போனால் ஈரான் ஆட்சியே கவிழ்ந்துவிடும் போலிருக்கே!" என்று உலக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'பராசக்தி' பட வசூல் போல ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், இப்போது 'ப்ளாக்பஸ்டர்' ஹிட் அடிக்கும் வேகத்தில் ஈரான் முழுவதையும் ஆக்கிரமித்து வருகிறது.
