வெனிசுவேலாவுக்கும் நான்தான் அதிபர்: 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் டிரம்ப் அதிரடி


டொனால் ரம்புக்கு  எப்பவுமே ஒரு நாடு பத்தாது போல! ஏற்கனவே அமெரிக்காவுக்கு 45 மற்றும் 47-வது அதிபராகப் பொறுப்பேற்று கெத்து காட்டிட்டு வர்ற அவரு, இப்போ திடீர்னு தன்னை 'வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர்' (Acting President of Venezuela) அப்படின்னு அதிகாரப்பூர்வமா அறிவிச்சு ஒரு போட்டோவை தட்டிவிட்டுருக்காரு. "அமெரிக்காவுக்கும் நான்தான் அதிபர், வெனிசுவேலாவுக்கும் நான்தான் பாஸ்"னு அவரு போட்ட போஸ்ட்டைப் பார்த்துட்டு, நிஜமான வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இப்போ "அப்போ நான் யாரு?"ன்னு மைண்ட் வாய்ஸ்ல கேட்டுட்டு இருக்காராம். மாமாவோட இந்த அதிரடி 'பதவி உயர்வு' இப்போ சோஷியல் மீடியால செம ட்ரெண்டிங்!

சும்மா போஸ்ட்டோடு நிறுத்தாம, மேட்டர்ல கொஞ்சம் சீரியஸாவும் இறங்கியிருக்காரு மாமா. இந்த மாசத் தொடக்கத்துல வெனிசுவேலா மேல ஒரு பெரிய அட்டாக் பண்ணி, அங்கிருந்த நிக்கோலஸ் மதுரோவையும் அவரோட பொண்டாட்டியையும் 'பார்சல்' பண்ணி நியூயார்க்குக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. அவங்க மேல போதைப்பொருள் கடத்தல் கேஸ் போட்டு ஜெயில்ல வச்சுட்டு, இப்போ அந்த நாட்டோட கல்லாவையும் மாமா கவனிச்சுட்டு இருக்காரு. "அங்க இருந்து 5 கோடி பேரல் எண்ணெய் (Oil) கப்பல்ல வந்துட்டு இருக்கு, அதோட மதிப்பு 4.2 பில்லியன் டாலர்"னு கணக்குச் சொல்லும்போது மாமா கண்ணுல இருக்குற அந்த மின்னலை நீங்க பார்க்கணுமே!

யார் எது சொன்னாலும் சரி, ரம் மாமா எப்போவுமே 'டான்' மாதிரி தான் முடிவெடுப்பாரு. "டீல் பேசுனா ஈஸியா பேசுவேன், இல்லன்னா கஷ்டமான வழியில வருவேன்"னு சொன்னதை இப்போ நிஜமாவே ஒரு நாட்டைத் தூக்கி நிரூபிச்சுட்டாரு. வெனிசுவேலா மக்கள் "எங்க ஊரு அதிபர் யாரு?"ன்னு குழப்பத்துல இருக்க, 

டிரம்ப் மாமா மட்டும் நிம்மதியா தன் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்துல புதுப் புதுப் பட்டங்களைச் சூட்டிக்கிட்டு ஜாலியா இருக்காரு. அடுத்ததா எந்த நாட்டுக்குத் தன்னை அதிபர்னு மாமா அறிவிக்கப்போறாருன்னு தான் இப்போ உலக நாடுகள் எல்லாம் 'திகில்' கலந்த வேடிக்கையோடு காத்துட்டு இருக்காங்க!

Source : https://truthsocial.com/@realDonaldTrump

Post a Comment

Previous Post Next Post