கீழே வீடியோ இருக்கு
"பிரிட்டன்ல இருக்குற RAF Fairford விமான தளம் இப்போ ஒரு அதிரடி ஆக்ஷன் படப்பிடிப்பு தளம் மாதிரி மாறிடுச்சு. அமெரிக்காவோட 'Elite' வீரர்கள், CV-22B Osprey ரக விமானத்துல இருந்து கயிறு வழியா வழுக்கிக்கிட்டு வர்ற 'Fast-rope' பயிற்சியை செம மாஸா பண்ணிட்டு இருக்காங்க.
"வெனிசுலா அதிபரையே ஜெயில்ல போட்ட ட்ரம்ப், அடுத்து அந்த நாட்டுக்கு சொந்தமான 'Bella-1' (இப்போ Marinera-னு பேர் மாத்தியாச்சு) ஆயில் டேங்கரை கைப்பத்தி இருக்காரு.அமெரிக்காவோட MH-6 Little Bird ஹெலிகாப்டர் இப்போ அந்த கப்பலை சுற்றி வளைச்சு நிக்குது. இதோ இப்போ வந்த தகவல்படி, அமெரிக்கப் படைகள் அந்தக் கப்பலுக்குள்ள இறங்கி தங்களோட கன்றோல்ல கொண்டு வந்துட்டாங்க!"
"RAF Fairford மற்றும் Mildenhall தளங்கள்ல திடீர்னு 14 C-17 Globemasters, அப்புறம் பயங்கரமான AC-130J Ghostrider துப்பாக்கிப் படகுகள் வந்து இறங்கியிருக்கு. எதுக்காக இவ்வளவு அவசரம்? ஒன்னு... அட்லாண்டிக் கடல்ல தப்பிச்சு ஓடுற கப்பல்களை பிடிக்கிறதுக்கு இது ஒரு 'Strategic Base'. ரெண்டாவது... மதுரோவை தூக்கினதுக்கு அப்புறம், லத்தின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில அமெரிக்காவோட 'Imperial' பவரை காட்ட ட்ரம்ப் போடுற பலமான ஸ்கெட்ச் இது.
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) 'எங்களுக்கு இதுல சம்பந்தம் இல்லை'னு ஜுஜுப்பி காட்டினாலும், அமெரிக்கா பிரிட்டன் தளங்களை ஒரு ஆக்ஷன் பிளாட்பார்மா மாத்திடுச்சு. எது எப்படியோ, நடுக்கடல்ல நடக்குற இந்த 'ஈகோ' வார் இப்போ உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு!"
Footage shows insertion training underway at RAF Fairford, UK, potentially indicating preparations for a boarding operation targeting the crude oil tanker Marinera. pic.twitter.com/Vmfh4vnfPk
— GMI (@Global_Mil_Info) January 6, 2026
