ஜன நாயகனுக்கு ஆதரவு கொடுத்த ஸ்டாலின்: இது அரசியலில் புதுசு கண்ணா புதுசு ...

 


என்னப்பா நடக்குது இங்கே? விடிய விடிய ‘யார் பெரிய ஆளு?’ன்னு அடிச்சுக்கிட்டிருந்த DMK-வும் TVK-வும் இப்போ ஒரே தட்டில் சோறு சாப்பிடுற ரேஞ்சுக்கு ஒண்ணா சேர்ந்துட்டாங்க! நம்ம தளபதியோட கடைசி படம் ‘ஜனநாயகன்’ ரிலீஸை சென்சார் போர்டு லாக் பண்ணி வச்சிருக்க, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சென்சார் போர்டை பிரிச்சு மேய்ஞ்சுட்டாரு. "சிபிஐ, ஈடி வரிசையில இப்போ சென்சார் போர்டையும் பாஜக ஒரு ஆயுதமா யூஸ் பண்ணுது"ன்னு ஸ்டாலின் போட்ட போடு  எல்லாரையும் தலை சுற்றி நிலத்தில் தள்ளும் போல இருக்கே ?

ஜனநாயகனுக்கு விழுந்த செக்!

பொங்கலுக்கு தளபதி தரிசனம் கிடைக்கும்னு காத்துக்கிட்டிருந்த ரசிகர்களுக்கு சென்சார் போர்டு ஒரு பெரிய ‘ஆப்ப’ வச்சிருச்சு. டிசம்பர்லயே அப்ளை பண்ணியும், சான்றிதழ் தராம இழுத்தடிச்சு, இன்னைக்கு (ஜனவரி 9) ரிலீஸ் ஆக வேண்டிய படத்தை ‘கோவிந்தா’ ஆக்கிட்டாங்க. கடைசி படம்ங்கிற சென்டிமென்ட்ல இருந்த ரசிகர்களுக்கு இது செம காண்டு!

 'பராசக்தி'க்கு நடந்த அறுவை சிகிச்சை!

இன்னொரு பக்கம் நம்ம எஸ்கே-வோட ‘பராசக்தி’ படத்துக்கு சர்டிபிகேட் கிடைச்சாலும், அதை ‘கட்’ பண்ணி கந்தலாக்கிட்டாங்க. ஹிந்தி திணிப்பு போராட்டத்தை பத்தி பேசினது தப்பா? 25 இடத்துல சீன் கட், 52 இடத்துல மியூட்! அதிலும் உச்சக்கட்டமா அண்ணா பேசுற வசனத்தை 22 செகண்ட் மியூட் பண்ணிருக்காங்க. "ஆன்மா இல்லாத உடம்பு மாதிரி படத்தை ரிலீஸ் பண்ணி என்ன புண்ணியம்?"னு சினிமா வட்டாரமே புலம்புது.

ஏன் இந்த திடீர் பாசம்?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! ஒரு பக்கம் டிவிகே-வும் டிஎம்கே-வும் எதிரும் புதிருமா இருந்தாலும், ‘மத்திய அரசு’ன்னு வரும்போது ரெண்டு பேரும் ‘தமிழன்’ கார்டை இறக்கிட்டாங்க. தளபதி படத்துக்கு ஸ்டாலின் சப்போர்ட் பண்ணுவது, விஜய் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கவா இல்ல உண்மையிலேயே சினிமா மேல இருக்குற பாசமான்னு நெட்டிசன்ஸ் மண்டையை பிச்சுக்கிறாங்க.

மொத்தத்துல, இந்த பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இல்ல, அரசியல்வாதிகளுக்கும் செம ‘காரசாரமான’ பொங்கலா தான் இருக்கப்போகுது!

Post a Comment

Previous Post Next Post