தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம் இப்போ வேற லெவலுக்கு போயிருக்கு. சென்னை உயர் நீதிமன்றத்துல நடக்குற இந்த கேஸ்ல, சென்சார் போர்டு (CBFC) சார்பா ஆஜராகப்போறது யாரு தெரியுமா? இந்தியாவின் டாப்-1 வக்கீலான Solicitor General Tushar Mehta தான்.
இவர் ஒரு மணி நேரத்துக்கு 3 லட்சம் ரூபாய் பீஸ் வாங்குறவராம். ஒரு சினிமா படத்தோட சென்சார் சான்றிதழ் கேஸுக்காக, மத்திய அரசு இவ்வளவு பெரிய 'Heavyweight' வக்கீலை இறக்குதுன்னா, இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய Political Agenda இருக்குன்னு கிளம்புற பேச்சு இப்போ வைரல் ஆகிட்டு இருக்கு!
காரணம் சிம்பிள். ஒருவேளை 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆனா, விஜய்யின் வாக்கு வங்கி (Vote Bank) 5 முதல் 7 சதவீதம் வரை எகிறும்னு கணக்கு போடுறாங்க. ஏற்கனவே அவருக்கு 28% வரை செல்வாக்கு இருக்கிறதா சர்வேக்கள் சொல்லுது. இப்போ இன்னும் 7% ஏறுனா, எதிர்வரும் தேர்தல்ல ADMK-BJP கூட்டணியோட நிலைமை என்ன ஆகுறது? அதனாலதான், இந்த படத்தை எப்படியாவது முடக்கணும்னு டெல்லி தரப்பு இவ்வளவு பெரிய 'கேம்' ஆடுறதா காங்கிரஸ் வட்டாரத்துல பரபரப்பா பேசிட்டு இருக்காங்க.
காங்கிரஸ் காரங்க என்ன சொல்றாங்கன்னா, படத்தை இன்னும் சில வாரங்கள் இப்படியே இழுத்தடிச்சா, தேர்தல் தேதிய அறிவிச்சுடுவாங்களாம். அதுக்கப்புறம் இது 'தேர்தலுக்காக எடுக்கப்பட்ட படம்'னு சொல்லி, Election Model Code of Conduct-ஐ யூஸ் பண்ணி, எலக்ஷன் முடியுற வரைக்கும் படத்தை பெட்டியிலேயே வைக்க பிளான் போடுறாங்களாம்.
இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலனாலும், எக்ஸ் (X) தளத்துல இதப்பத்தி விவாதம் அனல் பறக்குது. மத்திய அரசு இதுக்கு எந்த பதிலும் சொல்லாம மௌனமா இருக்குறது தான் இப்போ பெரிய சந்தேகத்தை கிளப்புது.
இந்திய வரலாற்றுல ஒரு ரீஜினல் சினிமாவுக்காக வேற மாநிலத்துல இருந்து பெரிய வக்கீலை தணிக்கை குழு இதுவரைக்கும் கூப்பிட்டதே இல்லையாம். விஜய்யை அரசியல்ல அடிபணிய வைக்கவும், அவரோட செல்வாக்கை குறைக்கவும் இது ஒரு பெரிய Well-planned strategy-ன்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க.
இன்னும் சிலர் என்ன சொல்லுறாங்கணா, விஜயை திசை திருப்பி சினிமா பக்கம் விட்டா, அவர் தன்னோட படம் ரிலிசுக்காக பிசியா இருப்பார். அதனால் அவர் அரசியல் பக்கம் கொஞ்ச நாளைக்கு வர மாட்டார். அப்படி ஒரு பிளான் என்று கூட பேசிக்கிறாங்க.
