கியூபா நாடு தற்போது ஒரு பயங்கரமான சுகாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்த நாட்டு மக்கள் எதனால் பாதிக்கப்படுகிறோம் என்றே தெரியாமல், வெறும் "வைரஸ்" (The Virus) என்று அழைக்கப்படும் ஒரு மர்ம நோயால் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர். கடுமையான காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள், தோல் உரிதல், மூட்டு வீக்கம் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற கொடூரமான அறிகுறிகளுடன் இந்த நோய் கியூபாவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை ஆக்கிரமித்துள்ளது. நிலைமை கையை மீறிச் சென்றதால், கியூபாவின் மருத்துவமனைகள் 'Collapse' ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்த மர்ம நோயால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், கியூபா அரசு வெறும் 52 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாகக் கூறி உண்மையை மறைப்பதாக (Cover-up) மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பதுதான் நெஞ்சைப் பிழிவதாக இருக்கிறது. மாடன்சாஸ் (Matanzas) என்ற பகுதியில் தொடங்கிய இந்த மர்ம மரணங்களை 'இயற்கை மரணம்' என்று சான்றிதழ் கொடுத்து மூடி மறைக்க அரசு முயன்றதாகவும், இது குறித்து எச்சரித்த செவிலியர் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கனடா அரசு, கியூபாவிலிருந்து வருபவர்களுக்கு ஏழு நாட்கள் 'Quarantine' மற்றும் கடுமையான மருத்துவப் பரிசோதனைகளை (Health Screening) கட்டாயமாக்கியுள்ளது. ஸ்பெயின் நாடும் தனது குடிமக்களை கியூபாவுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. கியூபாவின் மயானங்களில் இடமில்லாத அளவுக்குப் பிணங்கள் குவிந்து வருவதாகவும், ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 13,000 பேருக்குப் புதிய காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் 'British Medical Journal' ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மருத்துவ வல்லுநர்கள் இதை "Combined Arbovirus" என்று அழைக்கின்றனர். அதாவது, ஒரே நேரத்தில் பலவிதமான வைரஸ்கள் ஒருவரைத் தாக்குவதால், இது என்ன நோய் என்று கண்டறிவதே (Diagnosis) மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. கியூபாவில் நிலவும் இந்தச் சூழலை, அந்த நாடு கடந்த பல தசாப்தங்களில் சந்திக்காத மிக மோசமான "Serious Epidemic" என்று வர்ணிக்கின்றனர். ஊசி போற இடத்தைப் பார்க்காமல், உலக நாடுகளிடம் இருந்து உண்மையை மறைப்பதிலேயே குறியாக இருக்கும் கியூபா அரசின் செயலால், அந்த நாட்டு மக்கள் "நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம்" (We are dying) என்று கதறும் குரல் உலகத்தையே அதிர வைத்துள்ளது.
