புளூ சட்டை மாறன் பராசக்த்தியை கிழித்த விதமே தனியா இருக்கே !


அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதனை அப்படியே கீழே தருகிறோம். பாருங்க ... 

ஸ்டார் காஸ்டிங்னு சொன்னவுடனே, ஏதோ 'சூரரைப் போற்று' ரேஞ்சுக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கும்னு நம்பிப் போனோம். 1937-ல ஆரம்பிச்சு அந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை வச்சு ஒரு பீரியட் படம்னு பில்டப் கொடுத்தாங்க. நடராஜன், தாளமுத்துனு நம்ம மொழிப்போர் தியாகிகளோட தியாகத்தை எல்லாம் திரையில கொண்டு வரப்போறாங்கன்னு ஒரு ஆர்வத்துல உட்கார்ந்தா, கடைசியில நம்ம தலையெழுத்தை இப்படி எழுதிட்டாங்களே!

படத்தோட கதையில அந்த பழைய காலகட்டத்தை எல்லாம் செமையா ரீ-கிரியேட் பண்ணியிருக்காங்கதான், ஆனா அதை சொன்ன விதம் இருக்கே... அய்யோ அய்யோ! எதுக்கு இந்திய எதிர்க்கிறோம்னு ஒரு ஸ்ட்ராங்கான டாக்குமெண்ட்டா இருக்கும்னு பார்த்தா, இவங்க அதை ஒரு மசாலா படமா மாத்திப்புட்டாங்க. நம்ம தியாகிகள் பட்ட கஷ்டத்தை எல்லாம் பார்க்கும்போது கண்ணுல தண்ணி வரணும், ஆனா இவங்க எடுத்திருக்க லெவலப் பார்த்தா நமக்கு கடுப்புலதான் கண்ணுல தண்ணி வருது.

டைரக்டர் மேடம் பாலா கிட்டயும் அசிஸ்டண்டா இருந்திருக்காங்க, மணி சார் கிட்டயும் இருந்திருக்காங்க. அதனால என்ன பண்ணிருக்காங்கன்னா, பாலா சார் எடுக்கற மாதிரி ஒரு 'ரா'வான கதையை எடுத்துட்டு, அதுல மணி சார் ஸ்டைல்ல மசாலா எல்லாம் தூவி ஒரு விசித்திரமான கலவையை செஞ்சிருக்காங்க. இதை பார்க்குறது எப்படி இருக்கு தெரியுமா? நல்லா இனிப்பா இருக்குற 'சர்க்கரைப் பொங்கல்ல' சூடா 'ரசத்தை' ஊத்தி சாப்பிடுற மாதிரி இருக்கு. என்ன ஒரு டேஸ்ட்டான காம்பினேஷன் பாத்தீங்களா!

மொத்தத்துல இந்த படம் ஹிந்தி திணிப்பை பத்தி பேசுறதை விட, ஒரு கசப்பான மருந்தை தேன்ல கலந்து கொடுக்கறேன்னு சொல்லி நம்ம வாயில வேப்பங்காயை திணிச்ச மாதிரி இருக்கு. மத்த ஸ்டேட்ல எல்லாம் ஏன் ஹிந்தி திணிக்க முடியலனு நம்ம முன்னோர்கள் பண்ண வேலையை பெருமையா சொல்ல வேண்டிய இடத்துல, இவங்க ஏதோ பண்ணி வச்சிருக்காங்க. எதிர்பார்த்து போனது ஒண்ணு, கிடைச்சது வேற ஒண்ணு. தட்ஸ் ஆல் ட்ரிப் அப்ளிகேஷன் விளம்பரம் மாதிரி இதுவும் ஒரு மாதிரி போயிட்டு இருக்கு.

Post a Comment

Previous Post Next Post