மெட்ராஸ் ஹைகோர்ட்ல கடந்த சில நாட்களா அனல் பறந்துகிட்டு இருந்த "ஜனநாயகன்" படத்தோட சென்சார் வழக்குல, இப்போ அதிரடியான தீர்ப்பு வந்திருக்கு. நீதிபதி பி.டி. ஆஷா அவர்கள், "இந்திய சென்சார் வாரியம் (CBFC) உடனடியாக ஜனநாயகன் படத்திற்குச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார். படத்துக்குத் தடை விதிக்கவோ அல்லது சான்றிதழ் தராமலோ இழுத்தடிக்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் இப்போ செம குஷியில இருக்காங்க.
ஏற்கனவே இந்த படத்தோட சென்சார் சான்றிதழ் கிடைக்காததுக்கு பின்னால அரசியல் நெருக்கடி இருக்குன்னு ஒரு பக்கம் பேச்சு ஓடிக்கிட்டு இருந்தது. ஆனா, இப்போ கோர்ட் கொடுத்த இந்த "அடி" சென்சார் போர்டுக்கு ஒரு பெரிய பதிலடியா அமைஞ்சிருக்கு. "எல்லா படங்களுக்கும் பிரச்சனை இருக்கு"னு ஒரு மாயையை உருவாக்கி, மத்த ஹீரோக்கள் படத்தையும் இழுத்துவிட்டு மடைமாற்றம் செஞ்சவங்களுக்கு, இந்த தீர்ப்பு ஒரு பெரிய "செக்" வச்சிருக்குன்னே சொல்லலாம்.
இந்தத் தீர்ப்பை அடுத்து, படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுறதுக்கான வேலைகள் சூடுபிடிச்சிருக்கு. ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா இல்லையான்னு தவிச்ச ரசிகர்களுக்கு, இந்த நியூஸ் ஒரு பெரிய நிம்மதியைத் தந்திருக்கு. நீதிபதி பி.டி. ஆஷா கொடுத்த இந்த அதிரடித் தீர்ப்பு, சினிமாவையும் அரசியலையும் குழப்பிக்கிட்ட இருந்தவங்களுக்கு சரியான ஒரு பாடம்னு சமூக வலைதளங்கள்ல ரசிகர்கள் கொண்டாடி வராங்க!
