மதுரோவின் கைதைத் தொடர்ந்து, இப்போது அமெரிக்கா தனது பார்வையை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நோக்கித் திருப்பியுள்ளது. இங்கிலாந்தின் ஆர்ஏஎஃப் ஃபேர்ஃபோர்டு (RAF Fairford) மற்றும் மில்டன்ஹால் (RAF Mildenhall) தளங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவின் சி-17 குளோப்மாஸ்டர் (C-17 Globemaster) சரக்கு விமானங்கள் மற்றும் ஏசி-130ஜே கோஸ்ட்ரைடர் (AC-130J Ghostrider) போர் விமானங்கள் குவிகின்றன.
குறிப்பாக, நள்ளிரவு நேரங்களில் மட்டும் செயல்படும் 'நைட் ஸ்டால்கர்ஸ்' (Night Stalkers) எனப்படும் சிறப்புப் படை ஹெலிகாப்டர்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
வெனிசுலாவின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா கடல் முற்றுகையை (Naval Blockade) அமல்படுத்தியுள்ள நிலையில், 'பெல்லா 1' (Bella 1) என்ற எண்ணெய் கப்பல் பெயர் மாற்றி, ரஷ்யக் கொடியை வரைந்து கொண்டு 'மரினேரா' என்ற பெயரில் அட்லாண்டிக் கடலில் தப்பிச் செல்ல முயல்கிறது.
இந்தக் கப்பலை அமெரிக்காவின் பி-8 (P-8) கண்காணிப்பு விமானங்கள் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து கடற்கரையை ஒட்டித் துரத்திக் கொண்டிருக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான தற்போதைய அமெரிக்க அரசு, தனது 'ஹெஜிமனி' (Hegemony) எனப்படும் ஆதிக்கத்தைச் செலுத்தத் துடிக்கிறது.
பிரிட்டனில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானைத் தாக்கக் கூடும் என்ற செய்தி உலக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரோவின் கைதும், ஈரானை நோக்கிய இந்த ராணுவ நகர்வுகளும் 2026-ஆம் ஆண்டை ஒரு பெரும் போர் மேகங்களுக்குள் தள்ளியுள்ளது. உலக நாடுகளும், ஐநா சபையும் விக்கித்து நிற்கும் இந்தச் சூழலில், அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானவை!
