China teaches Trump two lessons on Taiwan தைவான் அருகே வைத்து சீனா அமெரிக்காவுக்கு கற்பித்த 2 பாடங்கள்:


அமெரிக்க அரசு, தைவான் நாட்டிற்கு சுமார் 11B பில்லியன் ஆயுதங்களை (11 billion arms deal with taiwan) வழங்க ஒப்புக்கொண்டது. மேலும் சொல்லப் போனால் தைவான், நடத்திய ராணுவ அணிவகுப்பில், அன் நாட்டு ராணுவம் பல அமெரிக்க ஆயுதங்களை காட்சிப் படுத்தி, சீனாவை சீண்டியது. குறித்த ராணுவ அணி வகுப்பு நடந்து, சில மணி நேரங்களில் எல்லாம், தாம் ஒரு போர் ஒத்திகை பார்க்க இருப்பதாக அறிவித்த சீன அதிபர். மின்னல் வேகத்தில் தனது ஒரு சிறிய முப்படையை, தைவான் நாட்டுக்கு மிக மிக அருகில் நகர்த்தினார். China holds military drills 

இதனூடாக சீனா அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ள 2 விடையம் என்னவென்றால். ஒன்று தாம் தைவானை கைப்பற்ற நினைத்தால் அது சில மணி நேரங்களில் நடந்து விடும். அமெரிக்க போர் கப்பல்கள் வந்து தைவானை காப்பாற்ற முடியாது என்பது. மற்றைய விடையம், தைவான் நாட்டு அதிபர் எதனை செய்தாலும் அது எந்த வகையிலும் சீனாவைப் பாதிகாது, அதேவேளை தைவான் தொடர்பாக ரம் என்ன பேசினாலும், அதனை நாம் எப்பொழுதும் கவனத்தில் கொள்ளமாட்டோம். அதனை ஒரு பொருட்டாக நாம் எண்ணுவது இல்லை என்பதாகும்.  China teaches Trump two lessons on Taiwan

சீனாவின் இந்த போர் ஒத்திகை, தைவானை மிரளவைத்துள்ளது. காரணம் தைவான் நாட்டுக்கு செல்ல இருந்த அனைத்து சர்வதேச கப்பல்களும் முடக்கப்பட்டு இருந்தது. பல சீன போர் விமானங்கள் தைவான் நாட்டுக்கு அருகாமையில் பறந்தது. சீனாவின் வேவு பார்க்கும் விமானம், மிக அருகில் சென்று சேகரிக்கவேண்டிய தகவல்களை சேகரித்தது. இவை எல்லாமே சீனா, தனது ஆதிக்கத்தின் கீழ் தான் தைவான் இருக்க வேண்டும் என்று நினைப்பதை எடுத்துக் காட்டுகிறது. Chinese Forces Fire Rockets Near Taiwan

உண்மையில் சொல்லப் போனால், Russia ன் எல்லையில் உள்ள உக்ரைன், எப்பொழுது நேட்டோ( NATO ) நாடுகளுடன் சேரப் போகிறேன் என்று கிளம்பியதோ, அன்று தான் புட்டின் உக்ரைனை தாக்க ஆரம்பித்தார். ஆதாவது பெரிய வல்லரசாக இருக்கும் ரஷ்யாவின் கொல்லைப் புறத்தில் அமெரிக்க வீரர்கள் வந்து நிற்பதை ரஷ்யா எப்படி விரும்பும். அதேபோலத் தான் சீனாவின் கொல்லைப் புறமான தைவானில் அமெரிக்க தளம் இருப்பதை, சீனா எப்படி அனுமதிக்கும் ? இது ஒரு நாட்டின் இறையாண்மை விவகாரம் அல்லவா ?

இன்றைய தேதிக்கு அமெரிக்காவிற்கு போட்டியாக ஏன் அமெரிக்காவை விட ராணுவ பலத்தில் முன்னணியில் இருக்கும் ஒரே நாடு சீனா தான். ரஷ்யா அல்ல. இது அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். மேலும் சீனா சமீபகாலமாக அணு ஆயுத உற்பத்தையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. பல உலக நாடுகள் அணு ஆயுத தயாரிப்பை முடக்கி வைக்க, சீனா மட்டும் மீண்டும் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் சீனாவிடம் தான் சுமார் 3.1 மில்லியன் ராணுவ வீரர்களும் 5 லட்சம் பரா ரூபர்ஸ்( para troopers ) என்று அழைக்கப்படும் , விமானத்தில் சென்று ஒரு நாட்டை கைப்பற்றக் கூடிய துருப்பும் உள்ளது. சீனாவின் பலத்தை எவராவது குறைத்து மதிப்பிட்டால், அது பெரும் அழிவை கொண்டு வரும்.

அமெரிக்கா, அதன் நேச நாடுகள்(நேட்டோ) மற்றும் இந்தியா இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து சீனாவை தாக்கினால் கூட, சீனாவால் தகுந்த பதிலடி கொடுக்க முடியும். ஆனால் இது ஒரு கசப்பான உண்மை. 

Post a Comment

Previous Post Next Post