Iran braces for possible US attack: இன்னும் சில மணி நேரத்தில் தாக்குதல் ஆரம்பிக்க வாய்ப்பு: ஊடகங்கள் தவல் !
எந்த இடத்தில் இருந்து தாக்கினால், ஈரானுக்கு அதிக பட்ச அழிவை ஏற்படுத்த முடியுமோ, இந்த இடத்தில் டொனால் ரம்பின் "ஆமேடா" என்று அழைக்கப்படும் கப்பல் படையணி சற்று நேரத்திற்கு முன்னதாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க CNN ஊடகம் தெரிவித்துள்ளது. (came at 11.55am Europe Time)
ஈரான் மீது அமெரிக்கா முன்னர் சில தடவைகள் தாக்குதல் நடத்தி இருந்தது. ஆனால் இம் முறை தாக்குதலை ஆரம்பித்தால், அது முற்று முழுதாக ஈரான் நாட்டின், ராணுவ கட்டமைப்பை சிதைக்கும் பெரும் நடவடிக்கையாக அது இருக்கும் என்று அமெரிக்க வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் ஈரான் நாட்டு ராணுவ நிலைகள், எண்ணை வழங்களை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, எந்த ஒரு அரபிய நாடும் அமெரிக்காவை எதிர்க்க தயாராக இல்லை என்பது மிகவும் சோகமான விடையம்.
இது இவ்வாறு இருக்க, ஈரானிடம் இருந்து, உக்ரைன் போருக்காக கமிக்ஷா தற்கொலை ட்ரோன்களை வாங்கி குவித்து வரும் நேச நாடான ரஷ்யாவும் இதனை தடுக்க முன்வரவில்லை. மேலும் சொல்லப் போனால் சீனா மற்றும் ரஷ்யா வாய் சவடால் மட்டுமே விட்டுள்ளார்கள். அமெரிக்கா படையை தடுத்து நிறுத்தும் சக்த்தி இங்கே யாருக்கும் இல்லை. எங்கேயும் எப்போதும், எந்த நாட்டையும் தன்னால் தாக்க முடியும் என்று நிரூபித்து வருகிறார் ரம்.
அமெரிக்காவின் இந்த "ஆமேடா" என்று அழைக்கப்படும் படையணியில், பல போர் கப்பல்கள் உள்ளது. இதில் ஆபிரஹாம் லிங்கன் கப்பலே மிகப் பெரியது. அது மட்டுமே போதும் ஈரான் போன்ற 3 நாடுகளை அழிக்க. அந்த அளவு ஏவுகணைகள் அதில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் "ஒரு மாய மான்" அடையாளம் காண முடியாது, ராடர் திரைகளில் தெரியாது, மேலும் ஜேமிங் சிஸ்டம் உள்ளது. இது போன்ற ஒரு மிகப் பெரிய படையை, ஈரான் அரசால் தாக்கவும் முடியாது. இருப்பினும் ஈரான் அரசு அடிபணியவில்லை என்பது , கொம்மேனி ஐயாவின் துணிச்சல் என்று தான் கூறவேண்டும்.

No comments: