இந்திய தமிழனை “அடிமை” என அழைத்த ஈழத்து KFC-Manager : £67,000 அபராதம் !


லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள West Wickham KFC கிளையில், மாதேஷ் ரவிச்சந்திரன் (Madhesh Ravichandran) என்ற இந்தியத் தமிழ் வாலிபர் 2023 முதல் பணியாற்றி வந்தார். அங்கு மேலாளராகப்(Manager) பணியாற்றியவர் கஜன் தெய்வேந்திரம் (Kajan Theiventhiram) என்ற ஈழத்தமிழர்,
மாதேஷைப் பார்த்து "அடிமை" என்று அழைத்துள்ளார்.

சக தமிழன் என்ற முறையில் உதவி செய்ய வேண்டிய மேலாளர் கஜன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாதேஷை மிகக் கேவலமாக நடத்தியுள்ளார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி: மாதேஷை சக ஊழியர்களுக்கு முன்னால் "அடிமை" (Slave) என்று அழைத்து இழிவுபடுத்தியுள்ளார். அவருக்கான விடுமுறைகளை அநியாயமாக மறுத்து, மற்ற ஊழியர்களை விடக் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறுத்தியுள்ளார்.

"நான் ஈழத்தமிழர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன்" என்று வெளிப்படையாகவே இனவாதக் கருத்துக்களைப் பேசி, மாதேஷை மனரீதியாகச் சித்திரவதை செய்துள்ளார். பொறுத்துப் பார்த்த மதுதேஷ் ரவிச்சந்திரன், இறுதியில் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Paul Abbott மேலாளர் கஜன் தெய்வேந்திரம் என்ற ஊத்தைவாளியின் செயல்பாடுகள் மிக மோசமான இனவாதப் பாகுபாடு (Race Discrimination) மற்றும் துன்புறுத்தல் (Harassment) என்று தீர்ப்பளித்தார்.

இதன் விளைவாக, அந்தக் கிளையை நடத்தும் நிறுவனத்திற்கு £66,800 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு மேலாளரின் தனிப்பட்ட அதிகாரத் திமிரால், அந்த kFC நிறுவனமே இன்று தலைகுனிந்து நிற்கிறது.கஜன் போன்ற சில நபர்கள் செய்யும் காரியங்கள், ஒட்டுமொத்த ஈழத்தமிழர் சமூகம் மீதான நன்மதிப்பைக் குலைக்கின்றன.

பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக உழைத்து நற்பெயர் ஈட்டிய தமிழர்களுக்கு மத்தியில், இதுபோன்ற 'அதிகாரப் திமிர்' பிடித்தவர்களின் செயல் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவியாகவும், வேலை தேடி வந்த புதியவர்களாகவும் இருக்கும் பல தமிழர்கள் இத்தகைய 'ஈழத்தமிழர்' மேலாளர்களிடம் சிக்கிச் சீரழிகிறார்கள். பிரித்தானிய நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு, கஜன் போன்றோர்களுக்கு ஒரு பலத்த எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

நன்றி

Kugaraj's post

Source KFC:  Madhesh Ravichandran won a significant employment tribunal case against a KFC franchisee, Nexus Foods Limited, after facing severe racial discrimination and harassment from a manager. He was awarded nearly £67,000 in damages for wrongful dismissal, racial harassment, and victimisation. 

Post a Comment

Previous Post Next Post