உலக நாடுகள் எல்லாம் போரையும், பஞ்சத்தையும் பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்தா, நம்ம வடகொரியா அதிபர் Kim Jong-un செம 'சில்' மோடுல இருக்காரு. வட ஹம்கயாங் மாகாணத்துல இருக்குற ஒரு செம சொகுசான Onpho Hot Spring (வெந்நீர் ஊற்று) ரிசார்ட்டுக்கு விசிட் அடிச்சிருக்காரு. போற இடத்துல டவுசர் போட்டுக்கிட்டு ஜாலியா இல்லாம, மனுஷன் வழக்கம் போல கனமான விடர் கோட் (Winter Coat)-ஐப் போட்டுக்கிட்டு போயிருக்காரு. அங்க இருந்த அந்த ஸ்டீமி ஸ்பாவை (Spa) பார்த்ததும், நம்ம ஆளு செம குஷியாகி, கையாலேயே தண்ணியத் தொட்டுப் பார்த்து டெஸ்ட் பண்ணிப் பார்த்திருக்காரு.
2018-ல இதே இடத்துக்கு வந்தப்போ, "என்னடா இது மீன் தொட்டியை விட கேவலமா இருக்கு"ன்னு அங்கிருந்த அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்குனாரு. "இப்படியே பண்ணுனீங்கன்னா நீங்க பண்றது பெரிய கிரைம்"னு மிரட்டிட்டு போனாரு. ஆனா இப்போ அந்த ரிசார்ட் செம ராயலா மாறினதப் பார்த்ததும், "ஆஹா, பிரமாதம்! இதப் பார்க்கும்போது எனக்கே பெருமையா இருக்கு"ன்னு செம பீலிங்ஸ்ல பேசியிருக்காரு. குளிக்க வந்த மக்களோட ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு, அங்கே இருந்த இளாம் பெண்களோட ஜொல்லு விட்ட மனுசன், தொட்டு கூட பேசி உள்ளார். அதிலும் ஆடை மாற்றும் அறைக்கு கூட சென்றிருக்கிறாராம்.
கிம் ஜோங் உன்னோட இன்னொரு பக்கம் இப்பதான் வெளிய வந்துருக்கு. நம்ம ஆளுக்கு டிஸ்னி (Disney) படங்கள்னா ரொம்ப புடிக்குமாம். அதுலயும் அந்த எலி சமைக்கிற 'ரட்டடூயி' (Ratatouille) படத்தோட தீவிர ரசிகராம். வடகொரியாவுல ஹாலிவுட் படங்களுக்குத் தடை இருந்தாலும், இந்த ஒரு படத்தை மட்டும் விடாமப் பார்த்து ரசிச்சாராம். "போர், ஏவுகணை"ன்னு எப்பவும் டென்ஷனா இல்லாம, அப்பப்போ இப்படி ரிசார்ட் போறதும், எலி கார்ட்டூன் பார்க்குறதுமா மனுஷன் செம 'கெத்தா' சுத்திட்டு இருக்காரு.
அடுத்த மாசம் நடக்கப்போற பார்ட்டி மீட்டிங்கிற்கு முன்னாடி இந்த ரிசார்ட்டைத் திறக்கப் போறாங்க. தன்னோட அப்பா கிம் ஜோங் இல் இறந்த பிறகு 2011-ல இருந்து இந்த நாட்டை ஒரு கை பார்த்துட்டு இருக்காரு இந்த 42 வயசு 'இளம்' தலைவர். உலகமே 2026-ல ரொம்ப அட்வான்ஸ்டா மாறினாலும், வடகொரியாவை மட்டும் ஒரு இரும்புத் திரைக்குப் பின்னாடி வச்சுட்டு, அப்பப்போ இப்படி ஒரு Spa Visit பண்ணி உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வச்சுடுறாரு நம்ம கிம்!
