ஒரே ஒரு போட்டோ... ஆனா அது கிளப்புன புயல் இருக்கே, அது 'கத்ரீனா' புயலை விட பயங்கரமானது! துபாய் ஏர்போர்ட்ல நம்ம Lady Super Star நயன்தாராவும், 'வலைப்பேச்சு' டீமும் (பிஸ்மி, அந்தணன், சக்திவேல்) ஒண்ணா நின்னு சிரிச்சுகிட்டு ஒரு செல்ஃபி எடுத்திருக்காங்க. இதப் பார்த்ததும் சோஷியல் மீடியாவுல, "என்னது... நயன்தாராவும் அவங்களும் பிரண்ட்ஸ் ஆயிட்டாங்களா?"ன்னு ஆளாளுக்கு வாயைப் பிளந்துட்டு இருக்காங்க. ஏன்னா, இதுக்கு பின்னாடி ஒரு பயங்கரமான Flashback இருக்கு!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு இன்டர்வியூல, இவங்க மூணு பேரையும் மறைமுகமா "மூன்று குரங்குகள்"னு நயன் சொல்லி ஒரு போடு போட்டாங்க. அதுக்கு பதிலுக்கு வலைப்பேச்சு டீமும், "ஒரு பெரிய நடிகை இப்படிப் பேசலாமா?"ன்னு அவங்க சேனல்ல வச்சு நயன்தாராவை ஒரு வழி பண்ணிட்டாங்க. அப்படி இருந்தவங்க இப்போ துபாய்ல ஒண்ணா சேர்ந்து நிக்கிறதைப் பார்த்ததும், "அட, குரங்குகளோட லேடி சூப்பர் ஸ்டார் மீட்டிங்"னு நெட்டிசன்ஸ் பயங்கரமா Troll பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
இது சம்பந்தமா பிஸ்மி கொடுத்த விளக்கம் தான் செம காமெடி. "நாங்க ஏதோ ஒரு விசேஷத்துக்காக துபாய் போயிருந்தோம், அதே ஃப்ளைட்ல நயன்தாராவும் வந்திருக்காங்க. ஏர்போர்ட்ல எதேச்சையா பார்த்தோம்"னு சொல்லிருக்காரு. போதாக்குறைக்கு, "அவங்க எங்களை ஒரே ஒரு தடவை தான் திட்டுனாங்க, ஆனா நாங்க எங்க சேனல்ல அவங்களை ஆயிரம் தடவை வச்சு செஞ்சிருக்கோம். ஆனாலும் நயன் செம கெத்தா சிரிச்சுக்கிட்டே வந்து பேசினாங்க"னு ஒரு Open Statement வேற கொடுத்திருக்காரு.
கடைசியா பிஸ்மி சொன்ன அந்தப் பஞ்ச் தான் ஹைலைட். "நான் நயன்தாரா இடத்துல இருந்திருந்தா, என்னைப் பத்தி இவ்வளவு பேசுனவங்களைப் பார்த்ததும் பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிருப்பேன்"னு அவரே ஒத்துக்கிட்டாரு. எது எப்படியோ, சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பான்னு நயன்தாரா காட்டிட்டாங்க. இந்த போட்டோ இப்போ இன்டர்நெட்ல Top Trending! லேடி சூப்பர் ஸ்டார் கிட்ட அந்த 'கெத்து' இன்னும் குறையலப்பா!
