வெனிசுலா நாட்டினுள் புகுந்து, அன் நாட்டு ஜனாதிபதியை எப்படி அமெரிக்க சீல் படை பிடித்தது ? இதோ திக் திக் நிமிடங்கள்.
Source: CIA Report:
2-01 AM:அதாவது சனிக்கிழமை(03) அதிகாலை வெனிசுலா நேரப்படி அதிகாலை 2.01க்கு அமெரிக்க விமானங்கள், Fort Tiuna அரச மாளிகைக் கோட்டைக்கு அருகே இருந்த, வான் எதிர்ப்பு சிஸ்டத்தை முற்று முழுதாக அழித்தது, அருகில் இருந்த La Carlota military airbase ராணுவத் தளத்தையும் பலமாகத் தாக்கியது. இதனால் உதவிக்கு வர இருந்த ராணுவம் நிலை தடுமாறியுள்ளது.
2:10 AM: மிகவும் தாழ்வாகப் பறந்து வந்த 3 ஹெலிகொப்டர்கள் (2 அப்பாச்சி ரக ஹெலி 1 துருப்பு காவி ஹெலி) திடீரென, அதிபர் மாளிகை கோட்டைக்கு அருகே தரையிறங்க , அதில் Delta Force படையினர் குதித்து வெளியேறினார்கள். 160th Special Operations Aviation Regiment என்று அழைக்கப்படும் இந்தப் படைப் பிரிவு வேகமாக அதிபர் மாளிகை நோக்கி முன்னேறியது.
2:15 AM – 2:30 AM: மிகக் கடுமையான துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும், டெல்டா படை முன்னேறி அதிபர் மாளிகைக்குள் செல்ல ஆரம்பித்தது. 3 பிரிவுகளாக அவர்கள் உள்ளே செல்லச் செல்ல, ஆங்காங்கே மறைந்து இருந்து தாக்கிய , வெனிசுலா ஜனாதிபதியின் விசுவாசம் மிக்க காவலர்களை, சுட்டுக் கொன்று டெல்டா படை முன்னேறியது.
2:45 AM: சரியாக அதிகாலை 2.45 மணிக்கு ஜனாதிபதி மதிறோ மற்றும் அவரது மனைவி சிலா( Maduro and Cilia Flores) ஆகிய இருவரையும் , கைது செய்தது அமெரிக்க டெல்டா படை. மாளிகைக்கு தெற்கு புறமாக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹெலிகொப்டர் நோக்கி ஒரு டெல்டா குழு முன்னேறிச் செல்ல, பின்னால் ஜனாதிபதி மற்றும் மனைவியை மற்றும் ஒரு Team பாதுகாப்பாக கொண்டு சென்றது. அதற்கு முன்னதாக அவர்கள் இருவருக்கும் குண்டு துளைக்காத ஆடைகளை அணிவித்தது டெல்டா படை.
3:15 AM: சரியாக 3.15க்கு ஒரு டெல்டா படை பிரிவு, தமது கைதிகளோடு ஹெலியில் புறப்பட்டார்கள். ஏனைய குழுவினர் பாதுகாப்பு வழங்கினார்கள்.
3:30 AM: வெனிசுலா கடலில், ஒரு ரகசியமான இடத்தில் அமெரிக்க போர் கப்பலான USS Iwo Jima நிறுதி வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஹெலிகொப்டர் இறங்கியது.
4.00AM :குறித்த போர் கப்பல் வெனிசுலா நாட்டு கடல் எல்லையை தாண்டி, பாதுகாப்பான இடத்திற்கு வர, 4.00 மணி ஆகிவிட்டது.
4:21AM: சரியாக அதிகாலை 4:21க்கு அமெரிக்க அதிபர் டொனால் ரம், வெனிசுலா நாட்டு அதிபரை சிறைப் பிடித்துவிட்டதாக அறிவிக்கிறார். உலகமே கிடு நடுங்கிப் போகிறது.
படுக்கை அறையில் என்ன செய்வது என்று தெரியாமல், வெளியே என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்துள்ளார் வெனிசுலா நாட்டு ஜனாதிபதி. அசைந்தால் நெத்தியில் சுட்டு விடுவார்கள் என்பது அவருக்கு நன்றாக புரிந்து இருக்கும்.
இறுதியாக கிடைத்த தகவலின் படி, வெனிசுலா நாட்டு ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் , நியூ யோர் நகருக்கு கொண்டு வந்து கொண்டு இருக்கிறது அமெரிக்க படை. இனி என்ன என்ன எல்லாம் நடக்க இருக்கிறது தெரியுமா ? அமெரிக்க நீதிபதிகள் அவருக்கு மரண தண்டனையை கொடுக்க உள்ளார்கள். இதுவே அவருக்கு கிடைக்கும் தீர்ப்பு என்பது ஊர் அறிந்த உண்மை !
