நடிகர் விஜய் அவர்களின் படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதில் தணிக்கைக் குழு (Sensor Board) மிகவும் பிடிவாதமாக இருக்கிறது. இது மத்திய அரசின் நேரடி அழுத்தமோ என்ற வலுவான சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. காரணம், சற்று முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா அவர்கள், இப்படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், தணிக்கைக் குழுவினர் அந்த உத்தரவை ஏற்க மறுத்துவிட்டனர்.
நீதிபதி ஆஷாவின் தீர்ப்பைக் கேட்ட அடுத்த கணமே, தணிக்கைக் குழுவின் வழக்கறிஞர் மேல்முறையீட்டு நீதிபதியைச் சந்தித்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். இதை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், தணிக்கைக் குழுவினர் ஏற்கனவே முழு முன்னேற்பாடுகளுடன்தான் (Planning) நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால், இன்றே மேல்முறையீட்டைப் பதிவு செய்ய தணிக்கைக் குழு தீவிரம் காட்டி வருகிறது. நாளை சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், இந்த வழக்கு இனி திங்கட்கிழமைதான் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் 'ஜனநாயகன்' படத்தை எப்படியாவது இழுத்தடிக்க வேண்டும் என்பதில் தணிக்கைக் குழு மிகத் தெளிவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
