மனிதர் புரிந்து கொள்ள இது மனித அறிக்கை அல்ல.. அல்ல.. MP கமல் ஜன நாயகன் குறித்து அறிக்கை !


"மக்களே... 'ஜனநாயகன்' படத்துக்கு ஒரு பக்கம் பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருந்தா, இன்னொரு பக்கம் 'நானும் ஒரு அறிக்கை விடுவேன்'னு நம்ம உலக நாயகன் கமலஹாசன் எம்பி (MP) ஐயா களத்துல குதிச்சிருக்காரு. ஆனா அந்த அறிக்கையில அவர் என்ன சொல்ல வர்றாரு, இல்லை எதைச் சுட்டிக்காட்டுறாருன்னு அவருக்கும் புரியல, நமக்கும் புரியல!

மனுஷன் அப்படி என்னதான் எழுதி இருக்காருன்னு படிச்சுப் பார்த்தா,  மனிதர் புரிந்து கொள்ள இது மனித அறிக்கை அல்ல... அல்ல... அதையும் தாண்டி சொதப்பலானது என்றே சொல்லலாம். 

அந்த அறிக்கையை ஒரு தடவை நீங்க படிச்சுப் பாருங்க கண்ணா... படிச்சுப் பார்த்து உங்களுக்கு அது புரிஞ்சிருச்சுன்னா, சத்தியமா சொல்றேன் உங்க ஐக்யூ (IQ) லெவல் வேற லெவல்ல இருக்குன்னு அர்த்தம்.

============================================

இந்த தருணம் எந்த ஒரு படத்தையும் விட பெரியது, இது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் அளிக்கும் இடத்தை பிரதிபலிக்கிறது.சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, நியாயமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படும் ஒரு திட்டத்தைச் சார்ந்து வாழும் எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் சிறு வணிகங்களின் கூட்டு முயற்சியாகும்.

தெளிவு இல்லாதபோது, படைப்பாற்றல் தடைபடுகிறது, பொருளாதார செயல்பாடு சீர்குலைகிறது. மேலும் பொது நம்பிக்கை பலவீனமடைகிறது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் சினிமா ஆர்வலர்கள் கலைகளுக்கான ஆர்வம், பகுத்தறிவு மற்றும் முதிர்ச்சியைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள். 

இப்போது தேவைப்படுவது, தணிக்கை  சான்றிதழுக்கான வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு மற்றும் ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட வெட்டு அல்லது திருத்தத்திற்கும் எழுதப்பட்ட, நியாயமான நியாயப்படுத்தலுடன் கூடிய சான்றிதழ் செயல்முறைகளை கொள்கை ரீதியான மறுபரிசீலனை செய்வதாகும்.

முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து நமது அரசு நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்கும், அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும், அதன் கலைஞர்கள் மற்றும் அதன் மக்கள் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும்\" என்று தெரிவித்தார்.",

ஐ ...ஐ... புரிஞ்சுதா உணக்கு ?

Post a Comment

Previous Post Next Post