Greenland Issue இப்போ உலக அரசியல்ல ஒரு பெரிய 'War of Words' ஆக மாறியிருக்கு. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்ற துடிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள் மீது 10% Import Tax விதிப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டாவோஸ் (Davos) நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசிய ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ட்ரம்பை ஒரு பிடி பிடித்துள்ளார். "ஒன்னா சேர்ந்து முன்னேறப் பார்ப்பதை விட்டுவிட்டு, இப்படி வரி விதிப்போம்னு மிரட்டுவது ரொம்பத் தப்பு" என்று ஓப்பனாகவே Blasted செய்துள்ளார்.
நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கும் வேளையில், ஐரோப்பா இனி அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் ஒரு 'New Independent Europe'-ஐ உருவாக்கும் என்று லேயன் சபதம் செய்துள்ளார். ட்ரம்ப் சும்மா இருக்காமல், ஒரு AI Image-ஐ சோசியல் மீடியாவில் தட்டிவிட்டுள்ளார். அதில் கனடா மற்றும் கிரீன்லாந்து அமெரிக்க வரைபடத்தில் இருப்பது போலவும், அதை ஐரோப்பிய தலைவர்கள் வேடிக்கை பார்ப்பது போலவும் எடிட் செய்யப்பட்டுள்ளது. இது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல ஆகிவிட்டது. "நாங்க கையெழுத்து போட்டா அதுக்கு ஒரு மரியாதை இருக்கணும், ஆனா நீங்க இப்படி பண்றது ரசனைக்கே இல்ல" என்று ஐரோப்பிய தரப்பு செம கடுப்பில் இருக்கிறது.
இந்த மோதல் முற்றிப்போனால், ஐரோப்பா தனது கையில் வைத்திருக்கும் 'Trade Bazooka' ஆயுதத்தை எடுக்கத் தயங்காது என்று எச்சரித்துள்ளது. அதாவது, சுமார் 81 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது பதிலுக்கு வரி விதிக்க ஐரோப்பா பிளான் போட்டுள்ளது. "நண்பர்கள் கை குலுக்கினால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கணும்" என்று ட்ரம்பிற்கு நாசூக்காக அறிவுரை கூறிய லேயன், கிரீன்லாந்தின் சுயாட்சியில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும், அங்கே ஐரோப்பாவே அதிக முதலீடு செய்து பாதுகாப்பைப் பலப்படுத்தும் என்றும் Bold ஆகப் பேசியுள்ளார்.
மொத்தத்தில், இந்த Trans-Atlantic row இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. "ட்ரம்ப் எங்களைப் பார்த்துப் பயப்படுறாரா இல்லையான்னு தெரியாது, ஆனா நாங்க எங்க இறையாண்மையை விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்கிற ரீதியில் ஐரோப்பா மாஸ் காட்டுகிறது. ஒரு பக்கம் ரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் இருக்கும்போது, அமெரிக்காவும் ஐரோப்பாவும் இப்படி மோதிக்கொள்வது தேவையில்லாத ஆணி என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்து. ஆனா ட்ரம்ப் விடுறதா இல்லையே! இனி வர்ற நாட்கள்ல இந்த Drama இன்னும் பல திருப்பங்களைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
