இன்ஸ்டாகிராம் பக்கமே போனாலே இப்போதெல்லாம் ‘வேலேரியா மற்றும் கமிலா’ என்கிற இரட்டையர்களின் அட்டகாசம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஒரே உடம்பில் இரண்டு தலைகளுடன், பிகினி உடையில் போஸ் கொடுப்பது, ஊர் சுற்றுவது என இவர்கள் போட்ட போஸ்ட்டுகளைப் பார்த்து, "பாவம்ப்பா.. ஆனா என்ன ஒரு தன்னம்பிக்கை!" என உருகிப்போய் இரண்டு மாதத்தில் 2.8 லட்சம் பேர் இவர்களைப் பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள். (கீழே புகைப்படங்கள் உள்ளது)
போதாக்குறைக்கு மேலும் சூடேற்ற , தனக்கு காதலன் ஒருவன் உள்ளான், நாங்கள் எப்படி உறவு கொண்டோம் என்று ஒரு போஸ்டைப் போட, இதை அறிய துடி துடித்தார்கள் , பல்லாயிரம் பேர். இதனால் மேலும் ஆதரவு பெருகியது.
இவர்களிடம் ரசிகர்கள் கேட்கும் டவுட்டுகளோ அதைவிடக் கொடுமை.. "நீங்க எப்படி டேட்டிங் போவீங்க?", "சாப்பிடும்போது சண்டை வருமா?" என இவர்களிடம் இண்டு இடுக்கு விடாமல் கேள்விகளைக் கேட்டு ஆளாளுக்கு ஒரு பக்கம் ‘சென்டிமென்ட்’ மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால், இந்த ‘ஒட்டிப்பிறந்த’ சென்டிமென்ட் கதைக்கு பின்னால் ஒரு பெரிய ‘ஆப்பு’ இருப்பதை சமீபத்தில் ஒரு நிபுணர் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார். "டேய் தம்பிங்களா.. இது நிஜமான பொண்ணுங்களே இல்லடா, இது மொத்தமும் AI (Artificial Intelligence) செஞ்ச வேலை!" என ஆண்ட்ரூ ஹல்பெர்ட் என்கிற ஏஐ இன்ஜினியர் போட்டு உடைக்க, ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள். அதாவது, மக்களை எமோஷனலாக வளைத்துப் போட்டு 'என்கேஜ்மென்ட்' அள்ளுவதற்காக ஒரு கம்ப்யூட்டர் மூளை போட்ட மாஸ்டர் பிளான் தான் இந்த Valeria மற்றும் Camila.
நிஜமாகவே இப்படி ஒரு இரட்டையர்கள் கிடையாது, அவர்கள் போட்ட போட்டோக்களும் வீடியோக்களும் வெறும் பிக்சல் வேலைதான் என்று தெரிந்ததும், "எங்க எமோஷனோட விளையாடிட்டீங்களேப்பா!" என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். ஆனாலும், அந்த இன்ஸ்டாகிராம் பக்கமோ, "நாங்க நிஜம் தான்ப்பா, நம்புங்கப்பா" என அடித்துச் சொல்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், "ஏற்கனவே ஊர்ல எவன் ஒரிஜினல் எவன் டூப்ளிகேட்னு தெரியாம சுத்திக்கிட்டு இருக்கோம்.. இதுல இந்த கம்ப்யூட்டர் பொண்ணுங்க வேற வந்து எங்கள ஏமாத்துதா?" என நொந்துபோய் கமெண்ட் அடித்து வருகிறார்கள். அடப்போங்கப்பா.. இனிமேல் இன்ஸ்டாகிராம்ல எதைப் பார்த்தாலும் ரெண்டு தரம் செக் பண்ண வேண்டியிருக்கு!




