கடலுக்கு அடியில் ஒரு மரணக் குழி: 30 இன்ச் பைப்லைன் உள்ளே இழுக்கப்பட்ட 5 வீரர்கள் (VIDEO)

 

கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஒரு மரண விபரீதம், இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி, மக்களை அப்படியே உலுக்கி வருகிறது. இன்று உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பாக பேசப்படும் விடையம் இது தான். வீடியோவை இங்கே இணைத்துள்ளோம். 

பிப்ரவரி 25, 2022.. கரீபியன் கடற்பகுதியில் எண்ணெய் கிணறு வேலைக்குச் சென்ற ஐந்து வீரர்களுக்கு அது ஒரு சாதாரண வெள்ளிக்கிழமை காலை. ஆனால், சில மணிநேரங்களிலேயே அவர்கள் கற்பனை செய்ய முடியாத ஒரு நரகத்தைச் சந்தித்தார்கள். கடலுக்கு அடியில் ஒரு பெரிய ஆயில் பைப்லைனை பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட ஒரு பயங்கரமான காற்றழுத்த மாற்றத்தால் (Delta P), அந்த 30 இன்ச் அகலமுள்ள பைப்லைன் அந்த ஐந்து பேரையும் அப்படியே உள்ளே இழுத்துக்கொண்டது. இருட்டு, ஆயில் நாற்றம், மூச்சுத் திணறல் என அந்த குறுகிய குழாய்க்குள் அவர்கள் மரணப் போராட்டம் நடத்தினார்கள்.

இந்தக் கொடுமையான விபத்தில் கிறிஸ்டோபர் பூட்ரம்  என்பவர் மட்டும் பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த ஆயிலுக்குள் நீந்தி வெளியே வந்து உயிர் தப்பினார். மற்ற நான்கு பேரும் உயிருடன் இருக்கிறார்கள், அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று அவர் கதறியும், அந்த ஆயில் நிறுவனம் "பாதுகாப்பு விதிமுறைகளை" காரணம் காட்டி யாரையும் உள்ளே அனுப்பவில்லை. இறுதியில் அந்த நான்கு வீரர்களும் அந்தப் பைப்லைனுக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்தார்கள். 2026-ல் இப்போதும் இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய தொழில்துறை அலட்சியமாகக் கருதப்பட்டு, அந்த வீரர்களின் குடும்பங்கள் நீதிக்காகப் போராடி வருகின்றன.

Previous Post Next Post

Contact Form