மேடையில் மைக் கிடைத்தால் போதும், எவன் எகிறினாலும் சரி, என்ன வார்த்தை பேசுகிறோம் என்றே தெரியாமல் 'லூசு' தனமாக எதிரிகளைத் தாக்கிப் பேசுவதே இவருக்கு வாடிக்கை. "ஆளுநரை சுட்டுக்கொல்ல தீவிரவாதி அனுப்புவோம்" என்ற ரேஞ்சுக்கு இவர் விட்ட 'ரீல்' மற்றும் குஷ்புவைப் பற்றிப் பேசிய அந்த லெவல் இல்லாத கமெண்டுகள் எல்லாம் அப்போது வைரலாகி திமுக-விற்கே பெரிய 'தலைவலி'யை கொடுத்தது. இதற்காக இவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு, அப்புறம் ‘மன்னிச்சுக்கோங்க அண்ணே’ என்று சொன்னவுடன் மீண்டும் சேர்த்துக்கொண்டது தனிக்கதை.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் 10-வது நீதிமன்ற நடுவர் ரேவதி, "பொது மேடையில் இப்படி ‘லோக்கல்’ தனமாக ஆபாசமாகப் பேசுவது சட்டம் ஒழுங்கை பாதிக்கும்" என்று கூறி, அவருக்கு இந்தத் தண்டனையைக் கொடுத்துள்ளார். ஆபாசப் பேச்சுக்கு 3 மாதம், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததற்கு 1 ஆண்டு, இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டியதற்கு 2 ஆண்டுகள் என மொத்தமாக 3 ஆண்டுகள் 'கம்பி' எண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கூடவே 20,000 ரூபாய் அபராதத்தையும் ‘கல்லாவில்’ கட்டச் சொல்லி தீர்ப்பு வந்துள்ளது.
தற்போது ஜாமீனில் இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் பெற்றுள்ளார். "பேய்க்குத் தெரியுமா திருநீறு, சிவாஜிக்குத் தெரியுமா மேடை நாகரிகம்?" என்று எதிர்க்கட்சியினர் ஒரு பக்கம் கலாய்த்துக் கொண்டிருக்க, "இனியாவது வாயைக் கொஞ்சம் அடக்கிப் பேசுவாரா?" என்று உடன்பிறப்புகளே ரகசியமாகப் பேசிக் கொள்கிறார்கள். எது எப்படியோ, அடுத்த சில நாட்களுக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 'சைலன்ட்' மோடுக்குச் செல்ல வேண்டியதுதான் மிச்சம்.
