GO BACK

என்ன மனுஷன் யா? ஆசனவாயில் 8 அங்குல பீரங்கி குண்டு! ஓடிய நோயாளிகள்.


ஆசனவாயில் 8 அங்குல பீரங்கி குண்டு! மருத்துவமனையில் இருந்து அலறியடித்து ஓடிய நோயாளிகள் - பிரான்ஸில் நடந்த பகீர் சம்பவம்!

பிரான்ஸ் நாட்டின் டூலோன் (Toulon) நகரில் உள்ள செயின்ட் ஆன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு, கடந்த சனிக்கிழமை இரவு 88 வயது முதியவர் ஒருவர் வந்தபோது அங்கிருந்த மருத்துவர்கள் சாதாரணமான ஒரு சிகிச்சையாகவே அதைக் கருதினர். ஆனால், தனது ஆசனவாய்க்குள் ஒரு பொருளை நுழைத்துவிட்டதாகவும், அது சிக்கிக்கொண்டதாகவும் அவர் கூறியபோதுதான் விபரீதம் தொடங்கியது. அந்தப் பொருளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத பீரங்கி குண்டு (Artillery Shell) என்பதை அறிந்து உறைந்து போயினர்.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் 'ரெட் அலர்ட்' விடுத்தது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்படும் வரை, மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஒருவேளை அந்த குண்டு வெடித்தால் மருத்துவமனையே தரைமட்டமாகும் அபாயம் இருந்ததால், பாதுகாப்பு கருதி அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அந்த முதியவரைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் வந்து ஆய்வு செய்ததில், அது 1900-களில் பிரெஞ்சு ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட 20 மி.மீ (8 அங்குல நீளம், 2 அங்குல அகலம்) கொண்ட பீரங்கி குண்டு என்பது உறுதியானது. பழைய காலத்து சேகரிப்புப் பொருளாக (Collector's item) இருந்த அந்த குண்டு தானாக வெடிக்கும் நிலையில் இல்லை என்பதை நிபுணர்கள் உறுதி செய்த பின்னரே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். இருப்பினும், அறுவை சிகிச்சையின் போது ஏதேனும் விபத்து நேருமோ என்ற அச்சம் அங்கிருந்தவர்களிடையே நிலவியது.

சவாலான இந்த அறுவை சிகிச்சையின் முடிவில், மருத்துவர்கள் அவரது அடிவயிற்றுப் பகுதியில் துளையிட்டு அந்த ராட்சத குண்டை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். ஒரு மனிதரின் ஆசனவாய்க்குள் இவ்வளவு பெரிய வெடிகுண்டு சிக்கியிருப்பது மருத்துவ வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என அங்கிருந்த மூத்த மருத்துவர்கள் வியப்புடன் தெரிவித்தனர். அந்த முதியவர் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் ரீதியான வினோத ஆசையினால் அந்த முதியவர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் வேளையில், "ஆப்பிள், மாம்பழம் எனப் பல பொருட்களைப் பார்த்திருக்கிறோம், ஆனால் பீரங்கி குண்டை இப்போதுதான் பார்க்கிறோம்" என மருத்துவமனை ஊழியர்களே கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வினோத சம்பவம் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் ஒரு நிமிடம் அதிர வைத்துள்ளது.