GO BACK

எல்லாமே Free னா அப்புறம் யாரு வேலை செய்வாங்க?" - சுப்ரீம் கோர்ட் தமிழக அரசிடம் கேள்வி !

விஜய் போஃபியா நிச்சயமாக முதல்வர் ஸ்டாலினை தொற்றிக் கொண்டது, தோற்கப் போகிறோம் என்று ரகசிய உளவு அறிக்கை கிடைத்த பின்னர் ஸ்டாலின் போடும் பிளான்களே தனி, எல்லாம் இலவசம் என்று அறிவிக்க ஆரம்பித்து விட்டார். 

நம்ம ஊர்ல தேர்தல் வருதுனாலே போதும், வானத்துல இருக்குற நிலாவையே பார்சல் பண்ணித் தருவோம்னு சொல்ற அளவுக்கு இலவசங்கள் (Freebies) மழை மாதிரி கொட்டும். இந்த விஷயத்துல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) போட்ட ஒரு மனுவை விசாரிச்ச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், செம்ம "ரோஸ்ட்" பண்ணிட்டாரு. "காலையில இருந்து நைட் வரைக்கும் சாப்பாடு ப்ரீ, அப்புறம் சைக்கிள் ப்ரீ, இப்போ கரண்ட்டும் ப்ரீ-னா... அப்புறம் யாரு தான் வேலைக்கு போவாங்க?" அப்படின்னு ஒரு போடு போட்டாரு. அதாவது, எல்லாத்தையும் இலவசமா குடுத்துட்டா, அப்புறம் மக்கள் கிட்ட உழைக்கிற எண்ணமே போயிடுமேன்னு கோர்ட் ரொம்பவே கவலைப்படுது.

"காசு இருக்குறவன், இல்லாதவன் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ட்ரீட்மென்ட்டா?" இதுதான் கோர்ட்டோட அடுத்த கேள்வி. பெரிய பெரிய நிலச்சுவான்தார்கள் எல்லாம் தோட்டத்துல லைட்டையும் மோட்டாரையும் சும்மா ஓடவிட்டு, பில்லை கவர்மெண்ட் கட்டச் சொல்றது எந்த ஊர் நியாயம்னு கேட்டிருக்காங்க. ஏழைங்களுக்கு உதவி பண்றது 'வெல்பேர்' (Welfare), ஆனா வசதி இருக்கிறவனுக்கும் சேர்த்து வாரி வழங்கினா அது 'அப்பீஸ்மென்ட்' (Appeasement) பாலிசின்னு ஜட்ஜ் ஐயா கிடுக்கிப்பிடி போட்டுருக்காரு. "வரி கட்டுற காசு என்ன மரத்துலயா காய்க்குது? அதை வச்சு ஸ்கூல், ஹாஸ்பிடல் கட்டலாமே"னு சுப்ரீம் கோர்ட் சொன்னது தான் இப்போ பெரிய ஹாட் டாபிக்.

சமூக வலைதளங்கள்ல இப்போ "வடை-சென்னை" ரேஞ்சுக்கு ஒரு பெரிய போரே நடக்குது. ஒரு பக்கம் "திராவிட மாடல்" சப்போர்ட்டர்ஸ், "இலவசங்கள் தான் மக்களோட முன்னேற்றத்துக்குக் காரணம், இதை தப்பா பேசாதீங்க ப்ரோ"னு கொடி பிடிக்கிறாங்க. இன்னொரு பக்கம், "ஏற்கனவே ஸ்டேட் கடன் ₹10 லட்சம் கோடியைத் தாண்டப்போகுது, இப்போவே உஷாரா இல்லைனா மொத்தமா 'கோவிந்தா' தான்"னு எக்கனாமிஸ்ட் எல்லாம் அலறுறாங்க. ஃப்ரீயா தர்றதுல இருக்குற சந்தோஷத்தை விட, அந்த கடனுக்கு வட்டி கட்டுறதுல தான் பெரிய பீதி இருக்குனு பலரும் கமெண்ட் அடிச்சிட்டு இருக்காங்க.

கடைசியா, கோர்ட் என்ன சொல்லிருக்குனா—இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்ல, இந்தியா முழுக்க இருக்குற எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். தேர்தல் வரும்போது மட்டும் இப்படி திடுதிப்புனு 'பையை' தளர்ந்து விடுறது என்ன மாதிரியான கல்ச்சர்னு மத்திய அரசு கிட்ட விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. "உழைச்சு வாழணும்டா தம்பி"ங்கிறதை மறைமுகமா சொல்லிட்டு, இந்த கேஸை மார்ச் மாசத்துக்கு தள்ளி வச்சிருக்காங்க. அதுவரைக்கும் இந்த "இலவசப் போர்" வாட்ஸ்அப் குரூப்கள்ல ஓயாது போல!