தற்போது பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சேலத்தில் விஜய் நடத்திய கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த நபர், தவெக வழங்கிய நுழைவுச் சீட்டுடனே பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் நேற்று சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்தினார். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டத்தில் தற்போது ஒருவர் இறந்துள்ளார் என்ற விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலியான சுராஜி குறித்து காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாவது; சுராஜ் (37), கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலத்தில் உள்ள அரசமரத்துகரட்டூர், கொல்லாம்படியில் வெள்ளி பட்டறையில் வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில், பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜி என்பவர் மயங்கிவிழுந்து பரிதாபமாக பலியாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர் பொதுவாக உள்ளே நுழைந்தவரா அல்லது கூட்டப் பணிக்காக வந்தவரா எனும் கேள்வி இருந்தது.
ஆனால் தற்போது அனைத்து சந்தேகங்களும் முடிவுக்கு வந்துள்ளது. கடும் வெய்யில் காரணமாக இவர் மயங்கி பின்னர் மாரடைப்பு வந்து இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
