GO BACK

சிவப்பு ராணியால் பதவி இழந்து மூட்டையை கட்ட உள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் !

பொதுவாக சில அரசியல் கட்சிகளில் திடீரென முளைக்கும் ஒரு முக்கிய புள்ளி, அந்தக் கட்சியை மட்டும் அல்ல ஒட்டு மொத்த நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விடுவார்கள். அந்த வகையில் பிரிட்டனில் ஆழும் லேபர் கட்சி, அதன் தலைவராகவும் பிரதமராகவும் இருக்கும் கியஸ் ஸ்டாமருக்கு பெரும் சோதனை வந்துள்ளது. விரைவில் பதவியை இழந்து, 10 டவுனிங் வீதி இல்லத்தையும் இழந்து, மூட்டை முடிச்சோடு வெளியே செல்லும் நிலை வரும் என்று , கருதப்படுகிறது. காரணம் இந்த "சிவப்பு ராணி" தான். ஆம் அவர் எப்பொழுதும் கடும் சிவப்பில் தான் ஆடைகளை அணிவது வழக்கம். அதில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் தான் ஒரு சிவப்பு ராணி என்று.

பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது அரசியல் வாழ்க்கையிலேயே இல்லாத அளவுக்கு மிக மோசமான நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். அடுத்தடுத்த ராஜினாமாக்கள் மற்றும் கட்சிக்குள்ளேயே வெடித்துள்ள புரட்சியால், அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த 48 மணி நேரத்திற்குள் அவரது மிக நெருக்கமான அதிகாரிகளான மார்கன் மெக்ஸ்வீனி (Chief of Staff) மற்றும் டிம் ஆலன் (Press Chief) ஆகியோர் பதவியை விட்டு வெளியேறியிருப்பது, பிரதமரின் அதிகாரம் காற்றில் பறப்பதையே காட்டுகிறது.

இந்த அரசியல் பூகம்பத்திற்கு முக்கிய காரணம், பீட்டர் மண்டெல்சன் (Peter Mandelson) என்ற சர்ச்சைக்குரிய நபரை அமெரிக்க தூதராக ஸ்டார்மர் நியமித்ததுதான். சிறையில் தற்கொலை செய்துகொண்ட பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடன் மண்டெல்சனுக்கு இருந்த தொடர்பு தெரிந்தே, அவரை உயர் பதவிக்கு ஸ்டார்மர் தேர்ந்தெடுத்தது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "பிரதமரின் முடிவெடுக்கும் திறன் மழுங்கிவிட்டது" என்று சொந்தக் கட்சியினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கீர் ஸ்டார்மர் பதவி இழக்க நான்கு வழிகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்:

  1. உள்நாட்டு சதி: தொழிலாளர் கட்சியின் 20% எம்.பி.க்கள் (சுமார் 80 பேர்) அவருக்கு எதிராக வாக்களித்தால் தலைமைப் போட்டி உருவாகும்.

  2. சுய விருப்ப ராஜினாமா: அழுத்தம் தாங்க முடியாமல் அவராகவே பதவி விலகலாம்.

  3. கட்சித் தலைவர்களின் எதிர்ப்பு: ஸ்காட்லாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் அனாஸ் சர்வார் ஏற்கனவே ஸ்டார்மரை 'அரசியல் நச்சு' (Politically Toxic) எனக் கூறி ஒதுக்கிவிட்டார்.

  4. நம்பிக்கையில்லா தீர்மானம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானத்தால் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது.