GO BACK

அடுத்து இந்தியா என்ன செய்யவேண்டும் என்ற கட்டளைகளை பிறப்பித்த ரம் ! மோடி மவுனம்...

டிரம்ப் விதித்த அனைத்துக் கடுமையான நிபந்தனைகளுக்கும் இந்தியா எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவிடம் எண்ணை வாங்க கூடாது, 500B பில்லியன் அமெரிக்க டாலர் பொருட்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க வேண்டும், விவசாய பொருட்களை இந்தியா வாங்க வேண்டும், அமெரிக்க பொருட்கள் இந்தியா வரும் போது 0% வரி தான் விதிக்க வேண்டும். அத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்திய அரசாங்கம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில் அமெரிக்கப் பொருட்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்கிற "Buy American" கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றவும் இந்தியா உறுதியளித்துள்ளது.

இதுபோல எக்கச்சக்க கட்டுப்பாடுகளை ரம் விதிக்க, வாயை மூடிக்கொண்டு மோடி அவர்கள் ஒத்துக் கொண்ட விடையம், அப்படியே இந்தியாவில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. கேள்வி கேட்ட ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை அப்படியே அமுக்கி விட்டார்கள் நாடாளுமன்றில். 

இதற்கு முன்னால் "தேசிய நலனே முக்கியம்" என்று கூறிவந்த இந்தியா, தற்போது டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பயந்து ரஷ்யாவுடனான பல கால உறவைத் துண்டித்துவிட்டு, இனி அமெரிக்காவிடமிருந்தே அதிக விலைக்கு எண்ணெய் வாங்கச் சம்மதித்துள்ளது.

இறுதியாக, இந்திய அரசாங்கம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில் அமெரிக்கப் பொருட்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்கிற "Buy American" கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றவும் இந்தியா உறுதியளித்துள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் விநியோகச் சங்கிலியைத் தவிர்த்துவிட்டு, முழுமையாக அமெரிக்காவைச் சார்ந்து இருக்க இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு, ஒரு இறையாண்மை கொண்ட நாடு அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு நிபந்தனையற்ற முறையில் சரணடைந்ததையே காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.