விருதுநகர் கல்குறிச்சியில திமுக இளைஞரணி மீட்டிங்னு சொன்னாங்க, ஆனா அங்க நடந்த கூத்து இருக்கே... சொல்லி மாளாது. நேரில பார்த்ததால சொல்லறன் கேளுங்க.. நம்ம முதல்வர் ஸ்டாலின் ஐயா, ஏதோ ‘கோட்’ படத்துல வர்ற விஜய் கணக்கா ஸ்டைலா ‘ராம்ப் வாக்’ நடந்து வந்தாரு.. இடையில திடீர் திடீர்னு 14 , 17 வயசு சின்னப் பசங்க வந்து பூக்கொத்து குடுக்குறாங்க. அந்தப் பசங்க கையில மிட்டாய் வாங்கவே காசு இருக்காது, இதுல எங்கருந்து பூக்கொத்து வந்துச்சு? எல்லாம் ‘ஸ்கிரிப்ட்’டா இருக்கும்போல!
கூட்டத்துக்கு ஆள் பிடிக்கிறதுக்காக நம்ம ஊரு கவர்மெண்ட் பஸ்ஸையெல்லாம் வரிசையா கட்டி இழுத்துட்டு வந்துட்டாங்க. வர்றவங்களுக்கு கையில 200 ரூபா ரொக்கம், அப்புறம் லோக்கல் டாஸ்மார்க்குல கொடுத்தா ‘சரக்கு’ தர்ற மாதிரி ஒரு டோக்கனும் கொடுத்திருக்காங்க. பெரியவங்களுக்கு குவார்ட்டர்னா, பாவம் சின்னப் பசங்களுக்கு மிக்சர் பாக்கெட்டும் சிப்ஸ்யும் கொடுத்து ஆஃப் பண்ணிட்டாங்க.
மதியம் சாப்பாடு வந்த லட்சணத்தைச் சொல்லவே வேணாம். சாப்பாட்டு பொட்டலத்தை ஆளுக்கொரு பக்கம் தூக்கிப் போட்டு கேட்ச் பிடிச்சுட்டு இருந்தாங்க. இதைப் பார்க்கும்போது நம்ம தமிழ்நாட்டுல இருக்கோமா இல்ல ஆப்பிரிக்காவுல இருக்கோமானு ஒரு நிமிஷம் டவுட்டே வந்துடுச்சு. அந்த அளவுக்கு பசி கொடுமை!
இதைவிட ஹைலைட் என்னன்னா, சாப்பாடு வந்த வண்டிதான். நகராட்சி குப்பை அள்ளுற வண்டியில சாப்பாட்டுப் பொட்டலத்தை ஏத்திட்டு வந்திருக்காங்க. ‘குப்பை வண்டியில சாப்பாடா?’ன்னு கேட்டா, அங்கே இருந்தவங்க அதையும் அசால்ட்டா வாங்கி சாப்பிடுறாங்க. தமிழனோட மானம் இன்னைக்கு குப்பை வண்டியில தொங்குதுன்னு நினைக்கும்போதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
கடைசியா மைக்கைப் பிடிச்ச ஸ்டாலின் ஐயா, விஜய் ஸ்டைல்ல “எல்லாரும் கான்பிடெண்டா இருங்க”ன்னு சொல்லப் போய், அப்புறம் டக்குனு சுதாரிச்சு “எல்லாரும் கான்பிடெண்ட் தானே?”ன்னு கேட்டு ஒரு வழியா சமாளிச்சு எஸ்கேப் ஆயிட்டாரு. விஜய்யை டிவியில பார்த்துப் பார்த்து ஐயாவுக்கு ‘விஜய் போபியா’வே வந்துடுச்சு போல! மத்தவங்க எப்படியோ, இந்த மாநாட்டுக்கு போனவங்க மட்டும் “ஏண்டா இங்க வந்தோம்?”னு தலையில துண்டைப் போட்டுட்டு வந்துட்டாங்க.
