GO BACK

எத்தனை ஆயிரம் கோடி செலவானாலும் விஜய் நிற்க்கும் தொகுதியில் திமுக போட்டியிடும் !

 

2026 தேர்தலில் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்தத் தொகுதியில் திமுகவின் மிக முக்கிய வேட்பாளரை இறக்கி, எத்தனை ஆயிரம் கோடியைக் கொட்டியாவது, விஜயைத் தோற்கடிக்க வேண்டும் என்று, அறிவாலயத்தில், உடன்பிறப்புகள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. காரணம் இந்த "தீய சக்தி" என்ற உவமையாம். எங்கே சென்றாலும், இளைஞர்கள் கூட்டம், தீய சக்தி என்று கூறி, திமுக பிரமுகர்களைக் கலாய்க்கிறார்களாம்.

ஏன் ஒரு முக்கிய திமுக உறுப்பினர் வீட்டில், அவர் பையனே "அப்பா திமுக ஒரு தீய சக்தி" என்று கூறியுள்ளான். இதனை அந்த நபர், அறிவாலயத்தில் வைத்து, நேரடியாக உதயிடம் சொல்லி கவலைப்பட்டுள்ளார். விஜய் போட்டியிடும் தொகுதி, காங்கிரசுக்கோ இல்லை கூட்டணிக் கட்சிகளுக்கோ ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அதனை விலக்கி, அங்கே திமுக போட்டியிடும் என்ற முடிவு நேற்று (07) எட்டப்பட்டுள்ளது. நீயா இல்லை நானா? என்று பார்க்க வேண்டும் என்று திமுக ஆவேசமாக உள்ளது. காரணம் விஜய் செய்த டேமேஜ்.

தமிழக அரசியலில் விஜய் தொடர்ந்து திமுகவை 'தீய சக்தி' எனச் சீண்டி வருவது ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் எந்தத் தொகுதியில் களம் இறங்குகிறாரோ, அங்கே திமுகவின் மிக வலிமையான வேட்பாளரை நிறுத்தி அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை செம உறுதியாக இருக்கிறது. விஜய் போட்டியிடும் தொகுதியில் எத்தனை கோடிகளை வாரி இறைத்தாவது அவரது அரசியல் வாழ்க்கைக்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உடன்பிறப்புகள் இப்போதே ஸ்கெட்ச் போட்டு வருகிறார்களாம்.

ஒருவேளை விஜய் போட்டியிடும் தொகுதி காங்கிரஸ் அல்லது மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தால், அந்தத் தொகுதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டு திமுகவே நேரடியாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளது. தப்பித்தவறி விஜய் ஜெயித்துவிட்டால் அது திமுகவின் இமேஜுக்கு பெரிய டேமேஜ் ஆகிவிடும் என்பதால், "நீயா நானா?" என்று பார்த்துவிட அறிவாலயம் ஆவேசமாக உள்ளது. ஆரம்பத்திலேயே விஜயைத் தோற்கடிப்பதன் மூலம், அவரது அரசியல் செல்வாக்கைச் சுக்குநூறாக உடைத்துவிடலாம் என்பதே திமுகவின் தற்போதைய கணக்காக இருக்கிறது.