GO BACK

Fact- Find தரைமட்டமான கமேனியின் மாளிகை அங்கே கமேனி இருந்தது உண்மையா ?


 ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அதிகாரப்பூர்வ வசிப்பிடமான தெஹ்ரான் வளாகம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் கடுமையாகச் சேதமடைந்துள்ளதைச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் (satellite images) உறுதிப்படுத்தியுள்ளன. ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில், கமேனியின் மாளிகை அமைந்துள்ள பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதும், அங்கிருந்த பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிக் கிடப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் தாக்குதல் நடந்த வேளை அங்கே கமேனி இருந்தாரா என்று கேட்டால், அதற்கான பதிலை எவரும் சொல்லவில்லை. ஆனால் ஈரான் பாதுகாப்பு அனைச்சர் கமேனி உயிரோடு உள்ளதாகவும் இன்னும் 3 மணி நேரத்தில் அவர் ஒரு அறிக்கை ஒன்றை விடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் மறு புறத்தில் டொனால் ரம் கமேனி இறந்து விட்டதாக தனது ரிவீட்டர் தளத்தில் தெரிவித்து பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

சர்வதேச ஊடகங்களான ருயிட்டர்ஸ் , CNN , போன்றவை, இன்னும் எதனையும் உறுதியாகச் சொல்லவில்லை. இதனால்  எந்த ஒரு முடிவையும் எட்ட முடியவில்லை. இதுவே உண்மை நிலை ஆகும். ஈரான் தலைவர் இறந்து இருந்தால், அவரது ஈமைக் கிரிகைகள் முறைப்படி நடக்கும். அவருக்கான அரச மரியாதை நிச்சயம் கொடுக்கப்படும். இதனூடாக  எல்லாமே வெட்ட வெளிச்சமாக தெரிந்து விடும். ஆனால் தற்போதைய நிலவரப்படி , கமேனி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. 

இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். அமெரிக்க தலைவர் குறிப்பிடுவது போல , எதனையும் எடுத்தோம் கவுத்தோம் என்று கூறிவிட முடியாது.